நாங்க தோத்தாலும் எனக்கு பெருமையாய் இருக்கு.. அடுத்த வருஷம் வேற மாதிரி கம்பேக் கொடுப்போம் – சிஎஸ்கே கேப்டன் பேட்டி

நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறி இருக்கிறது. இது சிஎஸ்கே தொடர்ச்சியாக மூன்றாவது முறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. சிஎஸ்கே அணியில் அதிகபட்சமாக ப்ரெவிஸ் 44 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அதற்குப் பிறகு விளையாடிய சன்ரைசர்ஸ் அணி ஒரு ஓவர் மீதம் வைத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலமாக சிஎஸ்கே பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் போட்டி முடிந்த பிறகு பேசிய சிஎஸ்கே கேப்டன் எங்கள் அணி தோற்றாலும் எனக்கு பெருமை அளித்ததாக கூறி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “இந்த போட்டியில் நாங்கள் இன்னும் ஒரு விக்கெட் கூடுதலாக எடுத்திருந்தால் அதிக அழுத்தம் கொடுத்திருப்போம் என்று நினைக்கிறேன். இருந்தாலும் அணியின் செயல்பாடு எனக்கு திருப்தி அளிக்கிறது. ஒரு கேப்டனாக நான் சிஎஸ்கே அணிக்கு இருப்பதை எண்ணி பெருமை கொள்கிறேன். பல்வேறு காயங்களிலும் எங்கள் அணியை சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எனவே அடுத்த ஆண்டு மீண்டும் வளமாக நாங்கள் வருவோம்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles