யோசிக்கவே வேணாம்.. கில், கோலி இல்லை.. இந்த வாட்டி ஐபிஎல் ஆரஞ்சு கேப் இவருக்குத்தான்.. சகால் அதிரடி பேட்டி

17வது ஐபிஎல் சீசன் வருகிற 22ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாளரான யுவேந்திர சகால் வரும் சீசனில் அதிக ரன் அடித்தவருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு கேப் வெல்லப் போகும் வீரரைக் கணித்துள்ளார்.

- Advertisement -

வருகிற ஐபிஎல் சீசனின் முதல் போட்டியாக சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. 22ஆம் தேதி நடைபெறும் இப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் ஒவ்வொரு சீசனிலும் அதிக ரன் அடித்தவர் மற்றும் அதிக விக்கெட் எடுத்தவர் என இரு வீரர்களுக்கு இரண்டு வண்ணங்களினால் ஆன தொப்பிகள் வழங்கப்படும்.

- Advertisement -

ஆரஞ்சு நிறத் தொப்பி அதிக ரன் அடித்தவருக்கும், நீல நிறத் தொப்பி அதிக விக்கெட் எடுத்தவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான யுவேந்திர சகால் ஆரஞ்சு தொப்பி வெல்லப் போகும் வீரரக் கணித்துள்ளார். சகால் இதுவரை டி20 லீக் வரலாற்றில் 145 போட்டிகளில் விளையாடி, 187 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். 2022ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் தொப்பியையும் வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

யுவேந்திர சஹால் முதலில் பெங்களூரு அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார். பின்னர் பெங்களூரு அணியில் இருந்து சகால் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. ராஜஸ்தான் அணியிலும் தனது சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி முன்னணி வேகப்பந்து வீச்சாளராக தற்போதும் தொடர்ந்து வருகிறார்.

இந்நிலையில் ‘ஜோக்கர்கியாவேலி’ என்ற youtube சேனலில் ஆரஞ்சு நிறத் தொப்பி வெல்லப் போகும் வீரர் குறித்த கேள்விக்கு சகாலின் ஆஸ்தான வீரர் விராட் கோலியின் பெயரையோ அல்லது இந்திய அணியின் வளரும் நட்சத்திரமான கில்லின் பெயரையோ குறிப்பிடவில்லை. மாறாக ராஜஸ்தான் அணியின் ஜோஸ் பட்லரையும், ஜெய்ஸ்வாலின் பெயரையும் குறிப்பிட்டு இருக்கிறார்.

- Advertisement -

பட்லர் அல்லது ஜெய்ஸ்வால் இவர்களில் ஒருவர் நிச்சயம் ஆரஞ்சு நிறத் தொப்பியை கைப்பற்றுவார்கள் என்று சஹால் கூறி இருக்கும் நிலையில் 2022ம் சீசனில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி உள்ள பட்லர் 17 ஆட்டங்களில் விளையாடி, 863 ரன்கள் குவித்துள்ளார். மற்றொரு வீரரான இந்திய அணியின் வளரும் நட்சத்திரமான ஜெய்ஸ்வால் 2023ம் சீசனில் தனது சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி 14 போட்டிகளில் 623 ரன்கள் குவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் அணி தனது முதல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் சஞ்சு சாம்சன் இந்த முறையும் அணியை சிறப்பாக வழி நடத்தி கோப்பையை வெல்வார் என்பதே ராஜஸ்தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles