நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் சிறந்த வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ரஜத் பட்டிதார் 32 பந்துகளில் 52 ரன்கள் குவித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இந்த நிலையில் இவரது பேட்டிங் விராட் கோலியின் பேட்டிங்கை ஞாபகப்படுத்துவதாக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகபந்து வீச்சாளர் பிரெட்லி கூறி இருக்கிறார்.
ஆர்சிபி அணி இந்த சீசனைப் பொருத்தவரை மிகவும் மோசமாகவே தொடங்கியது. ஏழு போட்டிகளில் தோல்வி பெற்று கிட்டத்தட்ட பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா பெறாதா? என்று தொங்கிக் கொண்டிருந்த நிலையில் அதற்குப் பிறகு மீண்டு எழுந்து தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பெற்று தற்போது புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. தற்போது பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என அனைத்து துறைகளிலும் ஆர்சிபி அணி வலுவாக விளங்குகிறது.
இந்த நிலையில் 2022ஆம் ஆண்டு பெங்களூர் அணிக்கு சிறப்பாக விளையாடிய ரஜத் பட்டித்தார் கடந்த சீசனில் காயம் காரணமாக தொடர் முழுவதும் பங்கேற்கவில்லை. அதற்குப் பிறகு இந்திய அணிக்காக டெஸ்ட் தொடரில் பங்கேற்ற அவர் பெரிய அளவில் சோபிக்காத நிலையில், தற்போது ஆர்சிபி அணியில் மீண்டும் வாய்ப்பு பெற்று மோசமான பங்களிப்பை வெளிப்படுத்தி வந்தார்.
கிட்டத்தட்ட அவரை உட்கார வைக்கும் நிலைமைக்கு வந்த போது அதற்குப் பிறகு இழந்த தனது பேட்டிங் ஃபார்மை மீட்டெடுத்தார். இவர் பார்முக்கு வந்து தொடர்ச்சியாக 5 அரைசதங்களை குவித்த பிறகுதான் ஆர்சிபி அணி வெற்றிப்பாதைக்கு திரும்பியது என்று கூட சொல்லலாம். மிடில் வரிசையில் இவரது சிறந்த பேட்டிங் பங்களிப்பு ஆர்சிபி அணிக்கு மிகப்பெரிய அளவில் உதவி வருகிறது.
இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான பிரெட் லீ இது குறித்து கூறும் பொழுது
“கடந்த போட்டியில் பட்டிதார் விளையாடும் ஒரு ஷாட்டை பார்த்தபோது நான் விராட் கோலி தான் விளையாடுகிறாரோ? என்று நினைத்துக் கொண்டேன். இந்த சீசனில் அவர் தொடர்ச்சியாக 5 அரை சதங்களை அடித்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட் அவருக்கு சரியாக செட் ஆகவில்லை. அதற்குப் பிறகு இன்றைய போட்டியில் அவர் ஆடிய ஆட்டம் என்னை பிரமிக்க வைத்தது என்று கூறினார்.
பின்னர் இதுகுறித்துப் பேசிய இர்பான் பதான் “பட்டி தார் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக குறிப்பாக அபாரமாக விளையாடி வருகிறார். சுழற் பந்துவீச்சாளர்கள் இவருக்கு எதிராக பந்து வீசுவதற்கு முன்னர் கலந்து ஆலோசிப்பது அவசியம்” என்று கூறி இருக்கிறார். நடப்பு சீசனில் பெங்களூர் அணி இதுவரை ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க:சூர்யா, ரோஹித்.. எதுக்கு உங்களுக்கு இவ்வளவு ஈகோ.. முதல்ல பவுலர்ஸ மதிக்க கத்துக்கோங்க.. விளாசும் முன்னாள் இந்திய வீரர்
பிளே ஆப் சுற்றை விட்டே முதல் அணியாக வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதன் பிறகு தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வெல்வது எல்லாம் அசாத்தியமான சாதனை தான். ஆர்சிபி அணிக்கு கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ஒரு போட்டி இருக்கிறது அந்த போட்டியில் வெற்றி பெற்றால் பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற மிகப்பெரிய வாய்ப்பு உருவாகும்.

