நேற்று முன் தினம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியிடம் தோல்வியை தழுவியது.
இந்த தோல்விக்கு முக்கிய காரணம் ரோஹித் சர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் நல்ல பந்துகளை மதிப்பதில்லை என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் குற்றம் சாட்டியுள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற இப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி மழை காரணமாக 16 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் குவித்தது.
அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா 24 பந்துகளை எதிர்கொண்டு 19 ரன்களும், மற்றொரு பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் 14 பந்துகளை எதிர்கொண்டு 11 ரன்களும் குவித்து ஆட்டம் இழந்து வெளியேறினார்கள்.
மேலும் மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைத்து நின்று விளையாடவில்லை. மும்பையின் முக்கிய பேட்ஸ்மேன்கள் இருவரும் அதிக பந்துகளை எதிர்கொண்டு குறைவான ரன்களை குவித்து வெளியேறிய நிலையில் இவர்களது பொறுப்பற்ற ஆட்டம் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.மேலும் தொடர்ச்சியாக மோசமான பங்களிப்பை வெளிப்படுத்து வரும் மும்பை அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பையும் இழந்து விட்டது.
இதுகுறித்து மும்பை அணியின் இந்த தோல்விக காரணம் ரோஹித் சர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் நல்ல பந்துகளை மதிப்பதில்லை என்று கூறி இருக்கிறார் இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது
“பொதுவாக யார் வந்து வீசினாலும் அவர்களை மதித்து விளையாட வேண்டும். மும்பை அணிக்கு விக்கெட்டுகள் விழாமல் இருந்திருந்தால் ரோகித் சர்மா மற்றும் சூர்யா ஆகியோர் ஒரு ஓவர் முன்னதாகவே போட்டியை வென்று முடித்து இருப்பார்கள்.
கொல்கத்தா அணியில் ஸ்டார்க் மற்றும் ராணா ஆகியோர் நன்றாக பந்து வீசினார்கள். நீங்கள் பேட்டிங் செய்ய வரும்போது எந்த ஈகோவுடனும் வரக்கூடாது.ஒன்று மனதில் எந்த சலனமும் இல்லாமல் இயல்பாக வரவேண்டும். அல்லது மோசமான பந்துகளை தண்டிக்கும் மனநிலையுடன் வர வேண்டும். நீங்கள் பெரிய பேட்ஸ்மேனாக இருந்தாலும் முதலில் நல்ல பந்துகளுக்கு மதிப்பளிக்க கற்றுக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க:தோனியை கடவுளாக பார்க்கும் ரசிகர்கள் அவருக்காக இதைக் கூட செய்வார்கள்.. சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு பேட்டி
அப்போதுதான் உங்களால் போட்டியில் சிறப்பாக செயல்பட முடியும்” என்று சேவக் கூறியிருக்கிறார். இவர்களைத் தவிர மும்பை அணியின் கேப்டன் ஹார்த்திக் பாண்டியா 4 பந்துகளை எதிர்கொண்டு வெறும் இரண்டு ரன்கள் மட்டுமே குவித்து அவுட் ஆகி வெளியேறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடரில் மும்பை அணி 13 போட்டிகளில் விளையாடி வெறும் நான்கு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 9 போட்டிகளில் தோல்வியை தழுவி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

