21 ஆண்டுகால சாதனை.. பென் டக்கெட்டின் மிரட்டல் சதம்.. கங்காரு அணியை அலறவிட்ட இங்கிலாந்து

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்று வருகிறது. லாகூரில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் பில் சால்ட் – பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தது.

- Advertisement -

இதில் பில் சால்ட் 10 ரன்களிலும், பின்னர் வந்த ஜேமி ஸ்மித் 15 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து டக்கெட் – ரூட் கூட்டணி இணைந்து 3வது விக்கெட்டுக்கு 158 ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்தது. சிறப்பாக ஆடிய ஜோ ரூட் 78 பந்துகளில் 68 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களில் பட்லர் 23 ரன்களும், ஆர்ச்சர் 21 ரன்களும் சேர்த்தனர்.

- Advertisement -

பென் டக்கெட் சாதனை

- Advertisement -

மற்றபடி ஆட்டத்தின் மொத்த பொறுப்பையும் பென் டக்கெட் எடுத்து கொண்டார். ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள், ஸ்பின்னர்கள் என்று அனைவரையும் ஒரு காட்டு காட்டினார். அதிரடியாக ஆடிய பென் டக்கெட் 95 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். சதம் விளாசிய பின் அதிரடியை அடுத்த கியருக்கு மாற்றிய அவர், விரைவாக 150 ரன்களை எட்டினார்.

சிறப்பாக ஆடிய அவர் இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, 143 பந்துகளில் 3 சிக்ஸ், 17 பவுண்டரி உட்பட 165 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலமாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை பென் டக்கெட் படைத்துள்ளார். இதுவரை 2004ல் நியூசிலாந்து அணியின் நேதன் அஸ்டில் 145 ரன்கள் விளாசியதே சாதனையாக இருந்தது.

- Advertisement -

அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து

கிட்டத்தட்ட 21 ஆண்டுகால சாதனையை பென் டக்கெட் முறியடித்துள்ளார். அதேபோல் பென் டக்கெட்டின் அதிரடியான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 351 ரன்களை குவித்தது. இதன் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்களை விளாசிய அணி என்ற சாதனையை இங்கிலாந்து அணி படைத்துள்ளது.

ஒரே போட்டியில் தனி நபர் அதிகபட்ச ஸ்கோர் மற்றும் ஒரு அணியாக அதிகபட்ச ஸ்கோர் என்று இரு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்து அணிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஒரேயொரு வீரரை சுற்றி இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் ஆடியதால், இந்த சாதனை வசமாகி இருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles