என் சாதனைகளை விராட் கோலி முறியடிப்பாருன்னு சச்சின் 12 வருஷத்துக்கு முன்னாடியே சொன்னாரு – பிசிசிஐ நிர்வாகி வியப்பு

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய அங்கமாக வகித்தவர் சச்சின் டெண்டுல்கர். பல சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் சச்சின் 2013 ஆம் ஆண்டு அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சச்சின் டெண்டுல்கர் முதல் விராட் கோலி வரை பிசிசிஐயின் நிர்வாகியாக இருந்த ராஜீவ் சுக்லா, சச்சின் டெண்டுல்கரிடம் இன்னும் இரண்டு ஆண்டுகள் இருந்தால் கிரிக்கெட்டில் 25 ஆண்டுகள் நிவர்த்தி செய்வீர்கள் எனவும் எனவே கொஞ்சம் அமைதி காக்குமாறு கூறியதாகவும் ஆனால் அதனை சச்சின் ஏற்க மறுத்து விட்டதாகவும் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “2013 ஆம் ஆண்டில் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பாக தனிப்பட்ட முறையில் என்னை அழைத்தார். நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று கூறினார். ஆனால் நான் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் விளையாடினால் 25 ஆண்டுகள் பூர்த்தி செய்வீர்கள் எனவே அந்த சாதனையை நிகழ்த்துமாறு கூறினேன். ஆனால் அதற்கு சச்சின் டெண்டுல்கர் மறுத்து பேசினார்.

- Advertisement -

‘இல்லை, இல்லை கிரிக்கெட்டுக்கு என்னால் 100% பங்களிப்பை கொடுக்க முடியாத நாள் இன்று என்று உணர்ந்து விட்டேன். அதனால் இந்த முடிவை நான் விரைவாக அறிவிக்க போகிறேன் என்று நினைக்கிறேன்’ என்று அவர் கூறினார். மேலும் அவரது சாதனைகள் குறித்து பேசிய போது சாதனைகள் என்பதே முறியடிக்கப்படக் கூடியவை தான். எனவே இது எதிர்காலத்தில் விராட் கோலி முறியடிக்க கூடும் என்று கருதுவதாக சச்சின் கூறினார்” என்று அவர் பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles