இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது பரபரப்பான நிலையை எட்டி இருக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகச் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறது.
இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 போட்டிகளில் வெற்றியும், நான்கு போட்டிகளில் தோல்வியையும் தழுவி இருக்கிறது. சமீபத்தில் தோல்வி பாதையில் தத்தளித்துக் கொண்டிருந்த சென்னை அணி நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வலுவாக வெற்றி பெற்றதன் மூலம் வெற்றிப் பாதைக்கு மீண்டும் திரும்பி இருக்கிறது.
இந்த நிலையில் சென்னை அணியின் முக்கிய பவுலராக திகழும் வங்காள தேசத்தை சேர்ந்த முஸ்தபிக்குர் ரகுமான் மே 1ஆம் தேதியோடு பஞ்சாப் அணியுடன் போட்டிக்குப் பிறகு வங்காளதேச அணியுடன் இணைவார் என்று தகவல் வெளியாகி இருந்தது ஏனெனில் வங்காளதேச அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு ஐந்து டி20 போட்டிகள் விளையாட இருப்பதால் முஸ்தபிக்குர் ரஹ்மான் தேசிய அணியில் இணைய வங்காளதேசம் செல்கிறார்.
தற்போது ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மிகச் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தி வரும் இவர் ஒரு சில போட்டிகளைத் தவிர பந்துவீச்சில் சிறப்பாக இருக்கிறார். இந்த நிலையில் அவர் மே 1ஆம் தேதியோடு ஐபிஎல்லில் இருந்து விடை பெற்று வங்காளதேசம் திரும்பினாலும் அணியுடன் இணைய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் வங்காளதேச அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடருக்கான வீரர்களை அறிவித்தபோது, அதில் சகிப் அல் ஹசன் மற்றும் முஸ்தபிக் ரகுமான் பெயர் இல்லை. காரணம் ஷகீப் அல் ஹசனுக்கு கண்களில் பிரச்சனை இருப்பதால் அவர் இந்த தொடரில் இருந்து ஓய்வு பெற்று உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் அவர் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் விளையாடவில்லை.
மேலும் முஸ்தபிக் ரஹ்மான் தொடர்ச்சியாக விளையாடிக் கொண்டிருப்பதால் வருகிற டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு அவருக்கு ஓய்வு அளிக்க வங்காளதேச கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவரும் இந்த தொடரில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஆடுகளம் நான் சொல்ற மாதிரிதான் இருக்கணும்.. பிசிசிஐ சொல்றதெல்லாம் என்கிட்ட சொல்லாது.. மாஸ் காட்டிய தல தோனி.. நடந்தது என்ன?
மேலும் சென்னை அணியில் இவரது இடத்தை நிரப்ப இங்கிலாந்து அணியை சேர்ந்த 35 வயதான க்ளீசன் என்பவரை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சென்னை அணியில் இணைந்த இவர் இன்னும் போட்டியில் பங்கேற்கவில்லை. எனவே இவரது விலகலுக்குப் பிறகு க்ளீசனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

