100 ரன்.. 41 பந்து.. வில் ஜாக்ஸ் அபார சதத்தால் வீழ்ந்த குஜராத் டைட்டன்ஸ்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அபார வெற்றி

இன்று நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணி ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வில்ஜாக்ஸ் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

- Advertisement -

அகமதாபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி பேட்டிங் செய்ய வந்த குஜராத் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக சகா மற்றும் கில் ஆகியோர் களமிறங்கினார். சகா இந்த முறை 5 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அணியின் கேப்டன் கில் 19 பந்துகளில் 16 ரன்கள் குவித்த நிலையில் ஒரு பவுண்டரியுடன் வெளியேறினார்.

- Advertisement -

இதற்குப் பிறகு களம் இறங்கிய தமிழக வீரர்களான சாய் சுதர்சன் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி குஜராத் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 49 பந்துகளை எதிர்கொண்ட சாய் சுதர்சன் 8 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 84 ரன்கள் குவித்தார். மற்றொரு அதிரடி ஆட்டக்காரரான ஷாருக் கான் 30 பந்துகளில் 3 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என 58 ரன்கள் குவிக்க குஜராத் அணி இறுதியாக மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பெங்களூர் அணித் தரப்பில் சிறப்பாக பந்து வீசிய சுழற் பந்துவீச்சாளர் ஸ்வப்னில் மூன்று ஓவர்கள் வீசி 23 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். இப்போட்டியில் வாய்ப்பு பெற்ற மேக்ஸ்வெல் 3 ஓவர்களில் 28 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். பின்னர் வெற்றி இலக்கை நோக்கி பெங்களூர் அணி களம் இறங்கியது.

அணியின் தொடக்க ஆட்டக்காரரான டூ பிளஸ்சிஸ் 12 பந்துகளில் ஒரு பவுண்டரி மூன்று சிக்ஸர்களுடன் 24 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு களம் இறங்கிய வில் ஜாக்ஸ் விராட் கோலி உடன் பாட்னர்ஷிப் அமைத்து மிகச் சிறப்பாக விளையாடினார். தொடக்கத்தில் அமைதி காட்டிய வில் ஜாக்ஸ் நிதானமாக விளையாட மறுமுனையில் அதிரடியாக விளையாடிய விராட் கோலி 44 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இதையும் படிங்க: சிராஜ் வேலைக்கு ஆகாது.. ஒரு போட்டியில் நன்றாக வீசுவார்.. 10 போட்டியில் சுமாரா வீசுவார்.. டி20 உலகக் கோப்பை தேர்வு குறித்து கூறும் ஸ்ரீகாந்த்

அதற்குப் பிறகு தனது அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்த வில் ஜேக்ஸ் 41 பந்துகளில் 5 பவுண்டரிகள் 10 சிக்சர்களை விழாசி 100 ரன்கள் குவித்து பெங்களூர் அணியை மிகப் பிரமாதமாக வெற்றி பெற வைத்தார். தனது அதிரடியின் மூலம் பெங்களூர் அணி 16 ஓவர்களிலேயே 206 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இதன் மூலம் தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது பெங்களூர் அணி. குஜராத் அணிக்கு இது ஆறாவது தோல்வியாக அமைந்துள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles