சிராஜ் வேலைக்கு ஆகாது.. ஒரு போட்டியில் நன்றாக வீசுவார்.. 10 போட்டியில் சுமாரா வீசுவார்.. டி20 உலகக் கோப்பை தேர்வு குறித்து கூறும் ஸ்ரீகாந்த்

டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்க இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் உலகக் கோப்பை காண இந்திய அணியை தேர்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக அஜித் அகர்க்கர் தலைமையிலான இந்திய தேர்வுக்குழு ஐபிஎல்லில் சிறப்பாக செயல்படும் வீரர்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

- Advertisement -

இந்த நிலையில் உலகக்கோப்பையில் இந்திய அணியில் இடம் பெறும் பந்துவீச்சாளர்ளில் நான் முகமது சிராஜை தேர்வு செய்யவே மாட்டேன் என்று முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார்.

- Advertisement -

2024 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணியை இந்திய தேர்வுக்குழு இன்னும் வெளியிடாமல் இருக்கிறது. பேட்டிங்கை பொருத்தவரை எப்போதும் இந்திய அணிக்கு பஞ்சமே இருக்காது. அதேபோல இந்த முறையும் தரமான வீரர்கள் ஐபிஎல்லில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கும் வேளையில், சஞ்சு சாம்சன், கே எல் ராகுல், ஜெய் ஸ்வால் மற்றும் கில் என இளம் வீரர்கள் தற்போது மிகச் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வேகப்பந்துவீச்சை பொறுத்தவரை பும்ரா மட்டுமே இப்போது கண்ணுக்கு தெரிகிறார்.

மேலும் நடராஜன் மற்றும் ஆவேஸ்கான் ஆகியோர் சிறப்பாக பந்து வீசிக் கொண்டிருக்கும் வேளையில், இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான முகமது சிராஜ், அவரது பந்து வீச்சு பெங்களூரு அணிக்காக மிகவும் சுமாராகவே இருந்து வருகிறது. எனவே இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் தேர்வு குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் பொழுது
” உலகக் கோப்பை தொடரில் விக்கெட் எடுப்பதற்கு கண்டிப்பாக 5 பந்துவீச்சாளர்கள் வேண்டும். அதில் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள், மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள். வேகப்பந்துவீச்சாளர்களை பொறுத்தவரையில் முதலில் இருப்பது பும்ரா அடுத்ததாக தெரிவது அர்ஸ்தீப் சிங். மூன்றாவது பந்துவீச்சாளரை எடுக்க வேண்டும் என்றால் நான் முகமது சிராஜை தேர்வு செய்ய மாட்டேன். ஏனெனில் அவர் ஒரு போட்டியில் நன்றாக வீசுவார். அடுத்த பத்து போட்டிகளில் மிகவும் சுமாராகவே செயல்படுவார். என்னைப் பொறுத்த வரையில் அவர் ஒரு ஒழுங்கற்ற பந்துவீச்சாளர்.

இதையும் படிங்க:இந்த 2 பேர் சிஎஸ்கேக்கு பிரச்சனை இல்லை.. எங்கள் தோல்விக்கு காரணமே இந்த ஒரு விஷயம்தான்.. கூறுகிறார் பயிற்சியாளர் மைக் ஹசி

எனவே டெத் ஓவர்களில் தற்போது சிறப்பாக யார் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். அந்த வகையில் தற்போது ஆவேஷ் கான் சிறப்பாக பந்து வீசி கொண்டிருக்கிறார். மூன்றாவது பந்துவீச்சாளராக அவரை தேர்வு செய்யலாம்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles