இந்தியா எல்லாம் கிடையாது இந்த முறை டி20 உலக கோப்பை எங்களுக்கு தான்.. அடித்துக் கூறும் ஆஸி கேப்டன் பேட்ரிக் கம்மின்ஸ்

டி20 உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா விரைவில் துவங்க உள்ள நிலையில் கோப்பையை வெல்லக்கூடிய அணிகளாக இந்தியா, இங்கிலாந்து ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இருக்கின்றன. இதில் இந்திய அணி முதன்மையாக இருக்கும் பட்சத்தில் அதற்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலிய அணி இருக்கிறது.

- Advertisement -

உலகக்கோப்பைத் தொடர்களில் எப்போதுமே ஆஸ்திரேலியா அணி வலுவான அணி என்பதால் இந்த முறையும் எதிர் அணிகளுக்கு கடுமையான போட்டியாக இருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. இருப்பினும் கடைசியாக நடந்து முடிந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து அதிர்ச்சி அளித்திருக்கும் நிலையில் கண்டிப்பாக நாங்கள் இந்த முறை டி20 உலகக் கோப்பையை வெல்வோம் என்று ஆஸ்திரேலியா டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டனான பேட்ரிக் கம்மின்ஸ் குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “2021 ஆம் ஆண்டு நடைபெற்ற t20 உலக கோப்பையில் நாங்கள் மோசமாக இருந்தோம். ஆனாலும் நாங்கள் கோப்பையை வென்று சாதனை படைத்தோம். எங்களிடம் அதிசக்தி வாய்ந்த ஓப்பனர்களான ஹெட் மற்றும் மார்ஸ் இருக்கிறார்கள். மேலும் தனியாக போட்டியை வெல்லும் டேவிட் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் இருக்கிறார்கள். மேலும் ஆசியாவில் தனது பந்துவீச்சு திறமையை நிரூபித்த ஸ்பின் பவுலர் ஆடம் ஜம்பா இருக்கிறார். எனவே நாங்கள் இந்த முறை நிச்சயம் கோப்பையை வெல்வோம்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles