தெறிக்கவிட்ட ரபாடா, யான்சன்.. போராடிய ஸ்டீவ் ஸ்மித், வெப்ஸ்டர்.. ஆஸ்திரேலியா 212 ரன்களுக்கு காலி!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் ஆஸ்திரேலியா அணி தரப்பில் கவாஜா – லபுஷேன் இணை தொடக்கம் கொடுத்தது.

- Advertisement -

ஸ்டீவ் ஸ்மித் அசத்தல்

இருவரும் நிதானமாக தொடங்கிய நிலையில், கவாஜா 20 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்காமல் ரபாடா பந்தில் ஆட்டமிழக்க, அதே ஓவரில் கேமரூன் க்ரீன் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ஆஸ்திரேலியா அணி 16 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. பின் ஸ்டீவ் ஸ்மித் – லபுஷேன் இணைந்து சிறிது நேரம் விளையாடினார்கள்.

- Advertisement -

ஆனால் மார்கோ யான்சன் பவுலிங்கில் லபுஷேன் 56 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ட்ராவிஸ் ஹெட் 11 ரன்களில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் முதல் செஷன் முடிவில் ஆஸ்திரேலியா அணி 67 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ந்து ஸ்மித் – வெப்ஸ்டர் இணை 2வது செஷனை தொடங்கியது.

- Advertisement -

தெறிக்கவிட்ட ரபாடா

ஸ்டீவ் ஸ்மித் விரைவாக பவுண்டரிகளை அடிக்க, வெப்ஸ்டரும் பவுண்டரிகளாக விளாசி ரன்களை சேர்த்தார். சிறப்பாக ஆடிய ஸ்டீவ் ஸ்மித் 76 பந்துகளில் அரைசதம் கடக்க, இவர்களின் பார்ட்னர்ஷிப் ஆஸ்திரேலியா அணியை மீட்டெடுத்தது. 5வது விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்க்கப்பட்ட சூழலில், ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் அதிரடியாக ஆடிய வெப்ஸ்டர் அரைசதம் கடந்ததோடு, ஆஸ்திரேலியா ஸ்கோரை 200 ரன்களை கடந்து கொண்டு சென்றார். சிறப்பாக ஆடிய அவர் 92 பந்துகளில் 72 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீரர்களில் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் ஆஸ்திரேலியா அணி 212 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் ரபாடா 5 விக்கெட்டுகளையும், யான்சன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles