விராட் கோலி இந்தியாவில் இருந்து டெஸ்ட் கிரிக்கெட்டை காதலிக்கிறார்.. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் கதையே வேற.. புலம்பிய ரஸல்

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வீழ்த்தி அபார வெற்றியை பெற்றது. இதன் மூலமாக ஆர்சிபி அணி முதல்முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று புதிய வரலாறு படைத்தது. இதனால் ஆர்சிபி அணியின் சீனியர் வீரரான விராட் கோலி ஆனந்த கண்ணீருடன் காணப்பட்டார்.

- Advertisement -

விராட் கோலி கருத்து

இந்த வெற்றி தொடர்பாக விராட் கோலி பேசும் போது, என் கிரிக்கெட் வாழ்க்கையின் மிகச்சிறந்த தருணங்களில் இதுவும் ஒன்றாகும். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டுடன் ஒப்பிடும் போது, 5 லெவல் குறைவானது தான். டெஸ்ட் கிரிக்கெட் மீதான மரியாதை அந்த உயரத்தில் வைத்திருக்கிறேன். அவ்வளவு மதிக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட் தான் ஒரு வீரருக்கு சர்வதேச அளவில் அடையாளத்தை கொடுக்கும் என்று தெரிவித்தார். 

- Advertisement -

விராட் கோலியின் கருத்து ரஸல் பதிலடி கொடுத்துள்ளார். அவர் பேசும் போது,  இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களைம் அந்த கிரிக்கெட் நிர்வாகம் சிறப்பான மரியாதையையும், ஒப்பந்தமும் கொடுக்கும். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் முற்றிலும் விஷயம் வேறாக இருக்கும்.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் கதை வேறு

இந்தியா போன்ற நாடுகளில் இருந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கு மிகப்பெரிய ஒப்பந்தம் கிடைக்கும். பெரிய போட்டிகளில் விளையாடுவதற்கு ஏற்ப ஊக்கம் அளிப்பார்கள். ஆனால் வெஸ்ட் இண்டீஸில் கதையே வேறு. நீங்கள் 50 டெஸ்ட் அல்லது 100 டெஸ்ட் போட்டிகளில் கூட விளையாடுங்கள்.. உங்களுக்கு பெருமையாக காட்டுவதற்கு எதுவும் இருக்காது.

என்னை பொறுத்தவரை ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடியதில்லை. வெஸ்ட் இண்டீஸ் நிர்வாகமும் என்னை டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து வெளியேற்றியது. என்னை முழுக்க முழுக்க ஒயிட் பால் கிரிக்கெட்டராகவே பார்த்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ரஸலின் இந்த கருத்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் சங்கத்தின் நிலையை பிரதிபலிப்பதாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles