வில்லியம்சன் இல்ல.. இந்த 3 நியூசிலாந்து வீரர்கள் கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும்.. இல்லனா கோப்பையை தட்டிட்டு போயிடுவாங்க – இந்தியாவை எச்சரிக்கும் ராயுடு !

பரபரப்பான சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. வரும் ஞாயிற்றுகிழமை துபாயில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் கோப்பைக்காக பைனலில் மோதுகின்றன.

- Advertisement -

ஏற்கனவே துபாய் மைதானத்தில் லீக் சுற்றில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதியப் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிப் பெற்றது. பேட்டிங்கில் ஐயர் மற்றும் பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி அணிக்குப் முதுகெலும்பாக திகழ்ந்தனர். இறுதிப் போட்டிக்கு முன்னர், இந்திய அணிக்குச் சவாலாக இருக்கும் 3 முக்கிய நியூசிலாந்து வீரர்கள் பற்றி அம்பாட்டி ராயுடு பேசியுள்ளார்.

- Advertisement -

அவர் கூறியிருப்பதாவது, ” இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியின் இந்த 3 வீரர்களை இந்திய அணி கவனித்து ஆட வேண்டும். மிடில் ஓவர்களில் மிட்செல் சான்ட்னர் ஸ்பின்னைப் பக்குவமாக ஆட வேண்டும். மேலும், பேட்டிங்கில் ரச்சின் ரவீந்திர நல்ல பார்மில் உள்ளார் என்பதால் அவர் டாப் ஆர்டரில் அணிக்கு அச்சுறுத்தலாக இருப்பார். மூன்றாவது வீரராக, ஒரே வேளை பிளேயிங் லெவனில் இடம்பிடித்தால் டெவான் கான்வே நியூசிலாந்து அணிக்கு டார்க் குதிரைப் போல செயல்படும் திறன் கொண்டவர். அவர் மேலும் ஒரு கண் இருக்க வேண்டும். ” என்றார்.

- Advertisement -

அம்பத்தி ராயுடு சொன்னது போலவே, மிடில் ஆர்டரில் நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் மிகவும் சவாலாக இருப்பார். இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த தென்னாபிரிக்கா அணியின் பவுமா, வான்டர் டசென், கிளாஸன் மூவரின் விக்கெட்டை சான்ட்னர் தூக்கி அணியின் வெற்றிக்கு மிக முக்கியப் பங்காக விளங்கினார். அடுத்ததாக பேட்டிங்கில் ரச்சின் ரவீந்திரா , இந்தத் தொடரில் 2 சதம் விளாசி அருமையான பார்மில் உள்ளார்.

மூன்றாவது வீரரான டெவான் கான்வே சரியான ரிதமில் இல்லாததால் அவர் பிளேயிங் லெவனில் இல்லை. ஒரு வேளை முக்கியப் போட்டி எனக் கருதி அவரை அணியில் சேர்த்தால் நன்கு விளையாடி அணிக்கு பக்கபலமாக இருப்பார் என ராயுடு கணித்துள்ளார். அழுத்தம் நிறைந்த நாக் அவுட் போட்டிகளில் கான்வே நல்ல விளையாட்டை வெளிக்காட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஏற்கனவ துபாய் பிட்சில் நியூசிலாந்து லீக் சுற்றில் இந்தியாவை எதிர்கொண்டுள்ளதால், இறுதிப் போட்டிக்குத் தவறுகளை திருத்திக் கொண்டு சரியான பிளானில் வருவார்கள். என்னதான் இந்திய வலுவாக இருந்தாலும் போட்டி லேசானதாக இருக்காது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles