பிரதமர் மோடி கோப்பை தந்த பின்.. இதுதான் நடந்துச்சு.. மேக்ஸ்வெல் வெளிப்படையான பேட்டி.!

கடந்த மாதம் நடந்து முடிந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதனைத் தொடர்ந்து ஆறாவது முறையாக உலகச் சாம்பியன் பட்டம் வென்று ஆஸ்திரேலியா சாதனை படைத்தது.

- Advertisement -

இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய அணியின் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலியா அணியின் துணை பிரதமர் ரிச்சர்ட் மர்லஸ் ஆகியோர் இணைந்து கோப்பையை வழங்கினர். பரிசளிப்பு விழாவின் போது பிரதமர் மோடி மற்றும் மார்லஸ் இருவரும் கோப்பையை வழங்கிய பிறகு உடனடியாக போடியத்திலிருந்து கீழே இறங்கினர். இதனால் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் கம்மின்ஸ் பரிசளிப்பு மேடையில் தனியாக நின்று கொண்டிருந்தார்.

- Advertisement -

இது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு இந்தப் புகைப்படத்தை பலரும் மீம்ஸ்களாக பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் அன்று நடந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் விளக்கம் அளித்திருக்கிறார். இது தொடர்பாக சிட்னி ஹெரால்ட் பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டியில் அன்று நடந்த சம்பவத்தை விவரித்துள்ளார்.

- Advertisement -

இது தொடர்பாக பேசியிருக்கும் மேக்ஸ்வெல் ” உலகக்கோப்பை இறுதிப் போட்டியின் பரிசளிப்பு விழா வீடியோவை இப்போது பார்த்தாலும் நகைச்சுவையாக இருக்கும். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர்கள் கம்மின்ஸ்க்கு கை கொடுத்து விட்டு உடனடியாக மேடையில் இருந்து வெளியேறினர். அவர்கள் மற்ற வீரர்களை கை கொடுத்து பாராட்டுவதற்காக மேடையில் இருந்து இறங்கினர் . ஆனால் கம்மின்ஸ் மேடையிலேயே எங்களுக்காக காத்திருந்தார். பத்து நிமிடங்கள் வரை அவரை அங்கேயே தனியாக விட்டிருந்தோம். அந்தப் பத்து நிமிடங்களையும் அவர் மிகச் சரியாக சமாளித்தார். வேறு யாராலும் அவர் போல் செய்திருக்க முடியாது.

அவர் அது தொடர்பாக எந்தவித ஆர்ப்பாட்டமும் செய்து கொள்ளாமல் எங்களுக்காக காத்திருந்தது ஒரு கிளாஸ் ஆக்ட் என தெரிவித்து இருக்கிறார். மேலும் ஆப்கானிஸ்தான் அணியுடன் போட்டி குறித்து பேசிய மேக்ஸ்வெல் அந்தப் போட்டியில் கம்மின்ஸ் அணிக்காக தனது ஈகோவை ஒதுக்கி வைத்து மிகவும் நிதானமாக விளையாடினார். அன்று விளையாடியது அவருடைய நேச்சுரல் கேம் இல்லை . ஆட்டத்தின் சூழ்நிலை மற்றும் அணிக்கு என்ன தேவை என்பதை புரிந்து விளையாடினார் . அது ஒரு கேப்டன் இன்னிங்ஸ் எனத் தெரிவித்தார்

- Advertisement -

மேலும் உலகக்கோப்பை தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் தோற்ற பிறகு கம்மின்ஸ் வீரர்களுடன் பேசியதை நினைவுகூர்ந்த மேக்ஸ்வெல் ” நாங்கள் முதல் இரண்டு போட்டியில் தோற்ற பிறகு எங்களிடம் பேசிய கம்மின்ஸ் உலகக்கோப்பையை உங்கள் கைகளில் யாரும் தர மாட்டார்கள் . நாம்தான் போராடி வெற்றி பெற வேண்டும் . உலகக்கோப்பை யாருக்கும் சொந்தம் கிடையாது. நீங்கள் வெற்றி பெற்றால் மட்டுமே அது உங்களுக்கு சொந்தம் என தெரிவித்தார் . எங்கள் அணியின் ஆக்ரோஷமான ஆட்டத்திற்கு அவரது இந்த பேச்சு காரணமாக அமைந்தது என தெரிவித்தார்.

தற்போது ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. மேலும் பிபிஎல் கிரிக்கெட் தொடரும் ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ளது. டி20 உலக கோப்பை போட்டிகள் வருகின்ற ஜூன் மாதம் நடைபெற இருப்பதால் டி20 போட்டிகளில் அதிகம் கவனம் செலுத்தி விளையாட இருக்கிறோம் என தெரிவித்திருக்கிறார் மேக்ஸ்வெல்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles