14 மாதங்கள் கழித்து வந்த கோலி.. முதல் t20ல் விலகல்.. காரணம் என்ன.?.. விளக்கம் கொடுத்த டிராவிட்

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதை அடுத்து இந்தியாவில் ஆப்கானிஸ்தான் அணியை டி20 தொடரில் எதிர்கொள்கிறது. சீனியர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அணிக்குத் திரும்பியுள்ளனர். ரோகித் சர்மா மீண்டும் டி20 அணிக்குக் கேப்டனாக பதவி வகிக்கிறார்.

- Advertisement -

முதல் டி20 போட்டி நாளை இரவு 7 மணிக்கு மொகாலியில் தொடங்குகிறது. 50 ஓவர் உலகக் கோப்பைக்குப் பிறகு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் டி20 உலகக் கோப்பையில் பங்கு பெற மாட்டார்கள் என்ற ஒரு கருத்து நிலவியது. ஜூன் மாதம் தொடங்க உள்ள டி20 உலக கோப்பைக்கு ஹார்த்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்படலாம் என்றே உறுதி செய்யப்பட்டது.

- Advertisement -

ஆனால் காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா தற்போது ஓய்வெடுத்து வரும் நிலையில் டி20 அணிக்குக் கேப்டனாக தலைமை தாங்குவாரா? என்பது சந்தேகமே. மேலும் ஹர்திக் பாண்டியா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகிய இரு பேட்ஸ்மேன்களும் காயம் அடைந்துள்ள நிலையில் சீனியர் வீரர்கள் இருவரும் அணிக்குத் திரும்பியது இந்திய அணிக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

- Advertisement -

ரோஹித் சர்மா கடைசியாக ஓய்வு பெறும் முன்பு டி20 உலகக் கோப்பையாவது வென்று கொடுத்து விட வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இதனை உறுதிப்படுத்தும் வகையில் ரோஹித் சர்மா மீண்டும் அணிக்குத் திரும்பியது ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

தொடக்க ஆட்டக்காரராக அவரது அதிரடி அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். மேலும் அவர் அணி வீரர்களை பற்றி நன்கு புரிந்து வைத்துள்ள நிலையில் இந்திய அணி உலகக் கோப்பையை எளிதாக எதிர்கொள்ளும். நாளை நடக்க உள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் அவரே அணியை வழிநடத்துவார் என்று தெரிகிறது.

- Advertisement -

விராட் கோலி 14 மாதங்கள் கழித்து மீண்டும் டி20 அணியில் இணைகிறார். கடைசியாக அவர் 2022ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டி20 அரை இறுதிப் போட்டியில் விளையாடினார். அதற்குப் பின்னர் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில்தான் இந்திய அணியுடன் இணைகிறார். ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவலின் படி விராட் கோலி முதல் டி20 போட்டியில் பங்கு பெற மாட்டார் என்று தெரிகிறது.

இதுகுறித்து புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி முதல் போட்டியில் விளையாட மாட்டார் என்று அறிவித்து இருக்கிறார். இதனால் நிச்சயமாக இரண்டாவது போட்டியில் களமிறங்குவார் என்று தெரிகிறது. மேலும் இளம் வீரர்களான திலக் வர்மா, ரிங்கு சிங் ஆகியோர் உலகக்கோப்பை அணியில் இடம்பெறும் நோக்கில் இந்தத் தொடரை நன்கு பயன்படுத்திக் கொள்வார்கள் என்று தெரிகிறது.

உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணி விளையாடும் கடைசி சர்வதேச டி20 தொடர் இதுவாகத்தான் இருக்கும். இதற்குப் பின்னர் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அதற்குப் பின்னர் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles