எனது பேட்டிங்கால் யுவராஜ் சிங் நிச்சயம் வருத்தமடைவார்.. காரணம் என்ன.?. விளக்கம் கூறும் அபிஷேக் ஷர்மா

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அபிஷேக் சர்மா 12 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள், ஆறு சிக்ஸர்கள் என விளாசி ஹைதராபாத் அணிக்கு மிக வலுவான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். ஆனால் தனது பேட்டிங் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் வருத்தப்பட போகிறார் என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் குவித்தது. சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ட்ராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக்சர்மா ஆகியோர் டெல்லி அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர்.

- Advertisement -

மிக அதிரடியாக விளையாடிய ஜோடி 36 பந்துகளில் 131 ரன்கள் குவித்து மிகப்பெரிய சாதனை படைத்தது. நீண்ட தூரம் பேட்டிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய இளம் வீர அபிஷேக் சர்மா 12 பந்துகளில் 46 ரன்கள் குவித்து நிலையில் எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்து வெளியேறினார்.

- Advertisement -

குல்தீப் யாதவின் ஓவரில் சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் அக்சர் பட்டேலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அபிஷேக்சர்மா இந்த சீசன் முதலிலேயே மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அபிஷேக்சர்மா இந்த சீசனில் ஏழு போட்டிகளில் விளையாடி 257 ரன்கள் குவித்துள்ளார். அபிஷேக் ஷர்மாவின் இந்த சீசனில் அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட் 215.97 மற்றும் சராசரி 36.71 ஆகும்.

போட்டி முடிந்த பின்னர் ட்ராவிஸ் ஹெட் உடன் இணைந்து இணையதளத்தில் பேசிய அபிஷேக் ஷர்மா நான் நீண்ட நேரம் களத்தில் நின்று பேட்டிங் செய்யாத காரணத்தினால் யுவராஜ் சிங் வருத்தம் அடைவார் என்று தெரிவித்திருக்கிறார் இது குறித்த அவர் கூறும் பொழுது
“இந்தப் போட்டியின் மூலம் யுவராஜ் சிங் வருத்தம் அடைவார். ஆனால் ஒட்டுமொத்தமாக மகிழ்ச்சியாக இருப்பார் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

யுவராஜ் சிங் எப்போதும் நான் நீண்ட நேரம் களத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். நான் என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன். நாம் நினைப்பதை விட அதிக பவுண்டரிகளை தேடுகிறோம். அதனால் அவர் நன்றாக இருப்பார் என்று நினைக்கிறேன். ஆனால் நான் அவரிடம் இருந்து இது குறித்து நிறைய ஆலோசிக்கப் போகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:ரசிகர்களின் கரகோசம்.. கையெடுத்து கும்பிட்ட தல தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ

இவரின் வலுவான அதிரடி ஆட்டத்தால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மிக வலுவான தொடக்கத்தை பெற்று வருகிறது. கடந்த சீசனிலும் அபாரமாக ஆடிய அபிஷேக் ஷர்மா இந்த சீசனில் மிகவும் அபாயகரமான பேட்ஸ்மேனாக விளங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles