சொன்னா கேளுங்க.. கில் வேணாம்.. குஜராத் கேப்டன்சியை இவருக்கு கொடுங்க.. ஏபி டிவில்லியர்ஸ் அதிரடி பேட்டி!

குஜராத் அணியிலிருந்து ஹர்திக் பாண்டியா வெளியேறியதைத் தொடர்ந்து, குஜராத் அணியின் கேப்டனாக யாரை நியமிக்கலாம் என்ற கேள்விக்கு தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும் ஆர்சிபி அணியின் முன்னாள் வீரருமான ஏபி டிவில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

- Advertisement -

2024ஆம் ஆண்டுக்கான ஐபில் தொடர் அடுத்த வருடம் மார்ச் மாதம் தொடங்க உள்ள நிலையில், தற்போது அனைத்து அணிகளும் தங்கள் அணியின் தக்கவைப்பு மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. டிரேடிங் முறையில் ஒரு அணி வீரரை இன்னொரு அணிக்கு மாற்றிக் கொள்ளும் உரிமையும் அணிகளுக்கு உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் குஜராத் அணியின் தலைவரும் இந்திய அணி வீரருமான ஹர்திக்பாண்டியா குஜராத் அணியிலிருந்து மும்பை அணிக்கு மாறிய நிலையில், குஜராத் அணிக்கு யார் கேப்டனாக வருவார்கள் என்கின்ற பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் வளரும் இந்திய அணி வீரரான சுப்மன் கில்லை கேப்டனாக அறிவித்தது குஜராத் அணி நிர்வாகம். இதனை சோசியல் மீடியா வலைத்தளங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இது குறித்து ஏபி டிவில்லியர்ஸ் விரிவாக கூறுகையில் “கேன் வில்லியம்சன் பெயரை தக்க வைத்த வீரராக பார்த்த அந்த நிமிடமே, குஜராத் அணியின் கேப்டனாக நியமிக்க அருமையான வாய்ப்பு இருப்பதாகக் கருதினேன். ஆனால் சுப்மன் கில்லுக்கு கேப்டன் வாய்ப்பு சென்று விட்டது. அவருக்கு தொடர்ந்து மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்க வேண்டும். அவர் மேலும் கில்லுக்கு ஒரு நல்ல ஐபிஎல் சீசனும் கிடைக்க வேண்டும்.

- Advertisement -

நான் இப்பொழுது கேப்டன்சி வழங்கப்பட்டது தவறு என்று சொல்லவில்லை. ஆனால் 2025ல் தான் சுப்மன் கில் கேப்டனாக இருக்க தகுந்த ஆண்டாக இருக்கும் என்று கருதினேன். இருப்பினும் இந்த முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது கேப்டன்சியைக் காண ஆர்வமாக உள்ளேன்” என்று கூறினார்.

கில் கடந்த ஆண்டு 890 ரன்கள் அடித்து ஆரஞ்சு தொப்பியை வென்றதும் குறிப்பிடத்தக்கது. கேப்டன்சி அளிக்கப்பட்டதை தொடர்ந்து கில் கூறும்பொழுது “குஜராத் அணியின் கேப்டனாக பொறுப்பேற்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். மேலும் இதுபோல ஒரு சிறந்த அணியை வழி நடத்த என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி” என்று கூறினார்.

ஹர்திக் பாண்டியாவின் தலைமையில் கீழ் குஜராத் அணியானது 2022இல் சாம்பியன் பட்டத்தையும், 2023இல் இறுதிப்போட்டி வரை வந்ததும் குறிப்பிடத்தக்கது. கில்லின் தலைமையின் கீழ் குஜராத் அணி சிறப்பாக செயல்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles