தோனி இதற்குப் பிறகும் சிஎஸ்கே உள்ள இருந்தா.. அது தப்பான காரணத்துக்கு கண்டிப்பா மாறும் – டிவிலியர்ஸ் கருத்து

19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆனது இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை ஆறாவது கோப்பையை கைப்பற்றும் நோக்கத்தோடு தங்களது அணியை தயார் செய்து வருகிறது. அதுக்குத் தகுந்தவாறு பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டு பகுதிகளிலும் சரியான வீரர்களை தேர்வு செய்த சென்னை அணி கோப்பையை வெல்லும் ரேசில் நிச்சயம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்த ஆண்டு எம்எஸ் தோனி அனைத்து போட்டிகளிலும் விளையாடுவாரா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் அவருக்கு பதிலாக அதே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு இணைந்திருக்கும் நிலையில் எம்எஸ் தோனியின் இடத்தை அவரால் நிரப்ப முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து தென் ஆப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் இது குறித்து சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ஒருவேளை தோனி கேப்டனாக இல்லாமல் பேட்டிங் வரிசையில் எட்டு அல்லது ஒன்பதாவது இடத்தில் களம் இறங்கினார் என்றால் அந்த இடம் காரணமே இல்லாமல் நிரப்பப்படுவது போலவும் தவறான காரணங்களுக்காகவும் அவர் அணியில் இருப்பது போல எனக்கு தோன்றுகிறது. ஒரு தனி வீரரால் எப்போதுமே கோப்பையை வெல்ல முடியாது. ஒரு அணி சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே வெல்ல முடியும். தோனிக்குப் பிறகு ருத்ராஜ் அல்லது சாம்சன் கேப்டன் பொறுப்பை ஏற்பதற்கு சிறப்பாக இருப்பார்கள்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles