பிளே ஆப் செல்லும் நான்கு அணிகள்.. சிஎஸ்கேவை தேர்வு செய்யாத டிவில்லியர்ஸ்.. காரணம் என்ன.? அவரே கூறும் கருத்து

ஐபிஎல் தொடரின் 18 வது சீசன் இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில் முதல் போட்டியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் விளையாட உள்ளன.

- Advertisement -

இதில் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் நான்கு அணிகள் குறித்து ஆர்சிபி முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் தனது கருத்துக்களை கூறியிருக்கிறார். அதில் எதிர்பாராதவிதமாக சிஎஸ்கே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த ஐபிஎல் சீசன் பொருத்தவரை அனைத்து அணிகளும் கடந்த ஏலத்தில் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கி அணிகளை வலுவாக கட்டமைத்தது. இருந்த போதிலும் இந்த அணிகளை கூர்ந்து கவனித்து பார்த்தால் அதனுடைய பலம் மற்றும் பலவீனம் ஆகியவை நன்றாக வெளிப்படும். இந்த சூழ்நிலையில் முதல் பலவீனமாக இருப்பது ரிஷப் பண்ட் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள லக்னோ சூப்பர் ஜெயின்ஸ். பந்துவீச்சு பலம் இல்லாதது மற்றும் முக்கிய வீரர்கள் காயம் போன்ற காரணங்களால் மற்ற அணிகளை காட்டிலும் பலவீனமாக இருப்பது போல தோன்றுகிறது.

- Advertisement -

அதற்கு அடுத்த இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இருக்கிறது. கடந்த சீசனில் விளையாடிய 6 நட்சத்திர வீரர்கள் கைவிட்டாலும் அதற்குத் தகுந்த வீரர்களை தேர்வு செய்யாத காரணத்தால் பலவீனமாக காட்சி அளிக்கிறது. இந்த சூழ்நிலையில் ஏபி டிவிலியர்ஸ் இந்த பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் நான்கு அணிகள் குறித்து தேர்வு செய்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் போது “இந்த முறை பிளே ஆப் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி தகுதி பெறும் என்று தோன்றுகிறது. அதே சமயம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் தகுதி பெறும். மேலும் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் தற்போது நல்ல நிலைமையில் இருக்கிறது. அடுத்து நடப்பு சாம்பியன் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். இந்த நான்கு அணிகள் தான் என்னுடைய கணிப்பில் இருக்கின்றன.

- Advertisement -

இதையும் படிங்க:ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை.. அம்பயராகும் பஞ்சாப் கிங்ஸ் வீரர்.. விராட் கோலி, ரவீந்திர ஜடேஜாவுடன் உலக கோப்பையை வென்றவர்.. இந்தியன் பிரிமியர் லீக்கில் நடுவர்

இந்த பட்டியலில் நான் சிஎஸ்கேவை வைக்கவில்லை. இந்த தொடரில் சென்னை அணியும் நன்றாக உள்ளது. எனது கருத்து ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைக்கலாம். ஆனால் ப்ளே ஆப் சுற்றுக்கு நான்கு அணிகள் தான் செல்ல வேண்டும் என்பதால் அதற்குத் தகுந்தவாறு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது” என்று கூறியிருக்கிறார். இந்தத் தொடரில் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் நல்ல வீரர்களை எடுத்து வலுவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles