என் திறமை மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.. என்னால முடியும்னு எனக்கு தெரியும்.. இவங்கதான் காரணம் – சூரியவன்சி பேச்சு

இன்று 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி சாம்பியன் ஆனது. இது இந்திய அணிக்கு ஆறாவது சாம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்றும் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு வைபவ் சூரியவன்சி 80 பந்தில் 175 ரன்கள் குவித்தார். இதில் 15 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்ஸர்கள் அடக்கம். இந்திய அணி 50 ஓவரில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 411 ரன்கள் குவித்து ஆச்சரியப்படுத்தியது.

- Advertisement -

இதைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 311 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

- Advertisement -

இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற வைபவ் சூரிய வன்சி பேசும் பொழுது ” எங்கள் அணியின் கடுமையான உழைப்பு, எங்கள் அணியின் ஆதரவு ஊழியர்களின் உழைப்பு, நாங்கள் விளையாடிய போட்டிகள் எல்லாம் சேர்ந்துதான் எங்களை இந்த இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறது. என்னுடைய இந்த விருதை நான் என்னுடைய அணியின் ஆதரவு ஊழியர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். என் திறமை மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எனவே நான் அதை நம்பி நம்பிக்கையுடன் காத்திருந்தேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles