தற்போது ஜிம்பாவே நாட்டில் நடைபெற்று வந்த 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியிருக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் செய்தது. இந்திய அணிக்கு தொடக்க இளம் ஆட்டக்காரர் 14 வயதான வைபவ் சூரிய வன்சி மொத்தம் வெறும் 80 பந்துகளை மட்டுமே சந்தித்து 15 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்ஸர்கள் உடன் 175 ரன்கள் குவித்தார்.
இவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் ஆயுஸ் மாத்ரே 51 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் மிடில் ஆர்டர்கள் அதிரடியாக ஆடாததால் எதிர்பார்த்த ஸ்கோர் வரவில்லை. இதைத்தொடர்ந்து இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 411 ரன்கள் குவித்தது.
மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணிக்கு பென் டவ்கின்ஸ் 56 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். இறுதிவரை இந்திய அணியை சோதித்த பால்கணர் சதம் அடித்து 67 பந்துகளில் 115 ரன்கள் எடுத்தார். இறுதியாக இங்கிலாந்து அணி 311 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

