இந்தியா ரொம்ப பாதுகாப்பான நாடு.. இங்கு எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை – வைரலாகும் ஆஸ்திரேலியா கேப்டனின் பேட்டி

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில் அனைத்து அணிகளும் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து வங்கதேச அணி விலகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சூடு தணிவதற்குள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வங்கதேச அணிக்கு ஆதரவு அளிக்கும் விதமாக இந்திய அணிக்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி விளையாடாது என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்தது.

- Advertisement -

இதற்கு எதிர்வினை ஆற்றி பல்வேறு இந்திய முன்னாள் வீரர்கள் தங்களது கண்டனங்களை வெளிப்படுத்தினார்கள். இது பாகிஸ்தான் கிரிக்கெட் சரியான திசையில் செல்லாது என்று பல வீரர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் கோப்பைகளை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக இருக்கும் ஆஸ்திரேலியா அணி, இந்தியா தங்களுக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது என்றும் எங்களுக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்று ஆஸ்திரேலிய கேப்டன் மிச்சல் மார்ஷ் அறிவித்திருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “டி20 உலக கோப்பை வெல்லும் கனவோடு நாங்கள் இந்தியா செல்கிறோம். மேலும் நாங்கள் இந்தியாவில் விளையாடுவதை மிகவும் விரும்புகிறோம். அங்கே எங்களுக்கு எந்த விதமான பாதுகாப்பு பிரச்சனையும் இல்லை” என்று கூறி இருக்கிறார். வங்கதேச அணி பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக டி20 உலக கோப்பை தொடரில் இருந்து விலகிய நிலையில் ஆஸ்திரேலியா கேப்டனின் பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles