தொழில்முறை வீரருக்கு அழகல்ல.. 45 நிமிஷத்துக்கு முன்னாடி தான் எங்ககிட்ட சொல்ராரு.. ஜோஸ் இங்கிலீஷ் குறித்து பஞ்சாப் கிங்ஸ் உரிமையாளர்

ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான ஜோஸ் இங்கிலீஷ் கடந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்த சூழ்நிலையில் அவர் தக்கவைக்கப்படாததற்கான காரணத்தை பஞ்சாப் கிங்ஸ் உரிமையாளரான நெஸ் வாடியா கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் போது “கடந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக ஜோஷ் இங்கிலீஷ் மிகவும் சிறப்பாக விளையாடினார். எனவே அவரை நாங்கள் தக்க வைப்போம் என்பது அவருக்கு முன்பே தெரியும். இந்த சமயத்தில் தக்கவைப்பு வீரர்களின் பட்டியலை வெளியிடுவதற்கு 45 நிமிடத்திற்கு முன்பாக எனக்கு திருமணம் இருக்கிறது, எனவே எனக்கு ஓய்வு தேவை. என்னால் முழு ஐபிஎல் தொடரும் விளையாட முடியாது, வெறும் மூன்று போட்டிகள் அல்லது இரண்டு வாரங்கள் மட்டுமே விளையாடுவேன் என்று கூறினார்.

- Advertisement -

இவ்வாறு பேசுவது ஒரு தொழில் முறை வீரருக்கு அழகு அல்ல. இதனை முன்கூட்டியே எங்களிடம் சொல்லி இருந்தால் நாங்கள் அதற்கு தகுந்தவாறு மாற்று ஏற்பாடுகளை செய்திருப்போம். அவர் திறமையான வீரர் தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை, அவருக்கு என் வாழ்த்துக்கள் ஆனால் அவர் நடந்து கொண்ட விதம் சரியில்லை” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles