பயிற்சியாளர் காலில் விழுந்து வணங்கிய ஹர்மன்ப்ரீத் கவுர்.. யார் இந்த அமோல் மஜூம்தார்?

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது. இதன் மூலமாக முதல்முறையாக இந்திய மகளிர் அணி ஐசிசி கோப்பையை வென்றுள்ளது. இந்தப் போட்டியில் வென்ற பின் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் நேரடியாக சென்று தலைமைப் பயிற்சியாளர் அமோஜ் மஜூம்தாரின் காலிகளில் விழுந்தார். 

- Advertisement -

அந்த காட்சியே இருவருக்கும் இடையிலான எமோஷனலான ஒன்றாக அமைந்தது. இதனால் அமோல் மஜூம்தார் குறித்த தேடல் ரசிகர்களிடையே தொடங்கியது. இந்திய கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் அறிமுகமான பின், அடுத்த சச்சின் என்று உள்ளூர் கிரிக்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டவர் தான் அமோல் மஜூம்தார். ஏனென்றால் ரஞ்சி டிராபி அறிமுகப் போட்டியிலேயே இரட்டை சதம் விளாசியவர். 

- Advertisement -

அதன்பின் ஒவ்வொரு சீசனிலும் அதிக ரன்கள் விளாசிய வீரர்களில் பட்டியலில் அமோல் மஜூம்தார் இருந்தார். ஆனாலும் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. மும்பை அணிக்காக சிறப்பாக ஆடிய போதும், அமோல் மஜூம்தார் தேர்வாகவில்லை.  2006-07 சீசனில் மும்பை அணியின் கேப்டனாக இருந்து கோப்பையையும் வென்று கொடுத்தார். ஆனாலும் வாய்ப்பு அளிக்கவில்லை. இறுதியாக 171 ரஞ்சி போட்டிகளில் விளையாடி 30 சதம், 60 அரைசதம் உட்பட 11,167 ரன்களை விளாசி ஓய்வை அறிவித்தார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles