ராஜஸ்தான் அணியில் அடுத்த விலகல்.. முழு கட்டுப்பாட்டை எடுக்கும் சங்கக்காரா? சஞ்சு சாம்சன் விலகுவது உறுதி.. இனியாவது திருந்துவார்களா?

கடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி 9வது இடத்தில் நிறைவு செய்தது. இதற்கு ராஜஸ்தான் அணியில் நடந்த அரசியலே காரணமாக கூறப்படுகிறது. ஏனென்றால் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ரியான் பராக்கை கொண்டு வர அந்த அணியின் உரிமையாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் காரணமில்லாமல் சஞ்சு சாம்சன் பல போட்டிகளில் பெஞ்ச் செய்யப்பட்டார்.

- Advertisement -

ராஜஸ்தான் அணி சர்ச்சை

இதனால் சஞ்சு சாம்சன் அந்த அணியில் இருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது. வரும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக சஞ்சு சாம்சன் விளையாட வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது. இதனிடையே சஞ்சு சாம்சனுக்கு முன்பாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது. 

- Advertisement -

இதுதொடர்பாக ராகுல் டிராவிட் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் ராஜஸ்தான் அணியின் சிஇஓ ஜேக் லஷ் மெக்கல்லமும் விலகினார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் மற்றொரு பயிற்சியாளரும் ராஜஸ்தான் அணியில் இருந்து விலகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மீண்டும் சங்கக்காரா? 

ராஜஸ்தான் அணியின் பவுலிங் பயிற்சியாளர் ராய்ராஜ் பகுதுளே பதவியை ராஜினாமா செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு சங்கக்காரா வரவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இதுவரை அது உறுதி செய்யப்படவில்லை. 

ஆனால் பவுலிங் பயிற்சியாளராக ஷேன் பாண்ட் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் ஆகிய இருவரும் தொடர்ந்து வருகின்றனர். தற்போது மீண்டும் சங்கக்காராவின் கூட்டாளியான ட்ரிவோர் பென்னி மீண்டும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. ராஜஸ்தான் நிர்வாகத்தின் மற்ற அணிகளை சங்கக்காரா தான் கவனித்து வருகிறார் என்பதால், அவர் பொறுப்பேற்க அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles