பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவின் பலரையும் கவர்ந்துள்ளது. சிறப்பாக ஆடிய அவர் 39 பந்துகளில் 5 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 74 ரன்களை விளாசி தள்ளினார்.
மிஸ்பா உல் ஹக் பாராட்டு
ஷாகின் அப்ரிடி வீசிய முதல் பந்திலேயே அபிஷேக் சர்மா சிக்ஸ் அடித்து பாகிஸ்தான் அணியின் மொத்த திட்டத்தையும் தவிடு பொடியாக்கினார். அபிஷேக் சர்மாவின் அதிரடியான ஆட்டத்தால், இந்திய அணி பாகிஸ்தான் அணியை பந்தாடியது என்றே சொல்லலாம். அபிஷேக் சர்மாவின் ஆட்டம் குறித்து இந்திய ஜாம்பவான்கள் மட்டுமல்லாமல், பாகிஸ்தான் முன்னாள் வீரர்களும் பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து மிஸ்பா உல் ஹக் பேசும் போது, 25 வயதில் அபிஷேக் சர்மாவின் திறமை மற்றும் பொறுமை ஆச்சரியம் அளிக்கிறது. அபிஷேக் சர்மா கொஞ்சம் கூட அழுத்தத்தில் இல்லை. அவர் ஏதோ வலைப் பயிற்சியில் ஆடுவதை போல் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அவரின் இடத்தில் பந்து பிட்சானால் கொஞ்சம் கூட அசராமல் பவுண்டரிக்கு விளாசுகிறார்.
அபிஷேக் சர்மாவின் திறமை
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், எதிரணியின் மிக முக்கியமான பவுலரை அபிஷேக் சர்மா டார்கெட் செய்கிறார். அவரை அழுத்தம் செய்வதன் மூலமாக, ஒட்டு மொத்த அணியும் பின்னடைவை சந்திக்க வேண்டியாதக் உள்ளது. வேகப்பந்துவீச்சாளர்களின் முக்கியமான ஆயுதமே ஹார்ட் லெந்த் தான்.
ஆனால் அபிஷேக் சர்மா ஹார்ட் லெந்தில் வீசும் பந்துகளை விளாசி விடுகிறார். ஷாகின் அப்ரிடி வீசிய ஹார்ட் லெந்த் பந்துகளை அபிஷேக் சர்மா மதிப்பு கொடுத்தாலும், அடுத்தடுத்த பந்துகளில் அபரிவிதமாக செயல்படுகிறார். ஃபுல் அல்லது ஷார்ட் லெந்த் பந்துகளுக்கு கொஞ்சம் கூட மரியாதை அளிப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.

