ஆயுஷ் மாத்ரே சிறப்பாக ஆடினாலும்.. வைபவ் சூர்யவன்ஷி ஒரு அதிசயம்தான்.. இளம் வீரர்களை கண்காணிக்கும் சிஎஸ்கே ஜாம்பவான்

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக அறிமுகம் செய்யப்பட்ட வைபவ் சூர்யவன்ஷி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 7 போட்டிகளில் விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி, ஒரு சதம் உட்பட 252 ரன்களை விளாசி தள்ளினார். அதன்பின் இங்கிலாந்து யு19 அணிக்கு எதிரான தொடரில் 7 போட்டிகளில் விளையாடிய அவர், 355 ரன்களை குவித்து அசத்தினார்.

- Advertisement -

சூர்யவன்ஷி ஒரு அதிசயம்

வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் இங்கிலாந்து ரசிகர்களை வியக்க வைத்தது. 14 வயதில் எப்படி ஒரு சிறுவனால் இப்படியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிகிறது என்று இங்கிலாந்து அணியின் நிர்வாகிகளே மிரட்சியை வெளிப்படுத்தினர். என்னதான் ஆயுஷ் மாத்ரே அசத்தலாக ஆடி இருந்தாலும், வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டமே அனைவரின் கவனத்தையும் திருப்பியது. 

- Advertisement -

இதுதொடர்பாக சிஎஸ்கே ஜாம்பவான் சுரேஷ் ரெய்னா பேசும் போது,   வைபவ் சூர்யவன்ஷி கொஞ்சம் வேறு மாதிரி.. மாத்ரேவும் மிகச்சிறப்பாக ஆடி வருகிறார். ஆனால் வைபவ் சூர்யவன்ஷி மாதிரியான எக்ஸ் ஃபேக்டர் வீரர்களை பார்ப்பது அதிசயம். ஐபிஎல் மற்றும் இங்கிலாந்து மண்ணில் சதம் விளாசிவிட்டார். சமஸ்திபூரில் இருந்து வந்த ஒரு பையனிடம் இவ்வளவு திறமை இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

- Advertisement -

சிஎஸ்கே அணியில் சுரேஷ் ரெய்னா?

பீகாரை சேர்ந்த பயிற்சியாளர் ஒருவர்தான் வைபவ் சூர்யவன்ஷியை தயார் செய்திருக்கிறார். இதுபோன்ற வீரர்கள் நூற்றாண்டுக்கு ஒருமுறை தான் வருவார்கள். ரிஷப் பண்ட், ரிங்கு சிங், வைபவ் சூர்யவன்ஷி, ஆயுஷ் மாத்ரே ஆகிய அனைவரும் ஈர்த்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார். ஆயுஷ் மாத்ரே சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் ஆடி 240 ரன்களை விளாசினார். 

அதேபோல் இங்கிலாந்து அணிக்கு எதிரான யு19 தொடரில் சதம் விளாசி ஆச்சரியப்படுத்தினார். இந்திய யு19 வீரர்களை சிஎஸ்ஜே ஜாம்பவான் சுரேஷ் ரெய்னா கவனித்து வருவது ரசிகர்களிடையே பேசுபொருளாகி இருக்கிறது. ஏற்கனவே சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளராக சுரேஷ் ரெய்னா வருவார் என்று கூறப்பட்டு வரும் நிலையில், இளம் வீரர்களை கவனித்து வருவது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles