ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க வீரராக களமிறங்கி அதிரடியான ஆட்டத்தை விளையாடி வரும் 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்சி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் எதிர்காலமாக மாறி இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் தான் முதல் போட்டியில் அழுதது குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 14 வயது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்சி அறிமுகமானார். அப்போது அந்த போட்டியில் 20 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்தார். இந்த நிலையில் அவர் ஆட்டம் இழந்து வெளியேறிய போது கண்களை துடைத்துக் கொண்டு வெளியேறியதால் அவர் அழுது கொண்டே செல்கிறார் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது.
அதற்குப் பிறகு குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்து வைபவ் மிகப்பெரிய புகழை பெற்று இருக்கிறார். இந்த சூழ்நிலையில் தற்போது தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் முதல் போட்டியில் தான் அழுகவில்லை என தன் மீது பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அதாவது தான் ஆட்டமிழந்து வெளியேறிய போது மின்சார விளக்குகள் தன் மீது பட்டதால் கண்ணை மூடிக்கொண்டு சென்றேன் என விளக்கம் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “நான் எப்போது அழுதேன்? நான் ஆட்டம் இழந்து வெளியேறிய போது அங்கிருந்த மின்விளக்குகள் மற்றும் எல்இடி பல்புகள் என் கண்கள் மீது பட்டதால் கூசியது. எனவே கண்களை தேய்த்துக் கொண்டே வெளியேறினேன், அந்த சமயத்தில் நான் அழவில்லை, ஆனால் அப்போது எல்லோரும் ஏன் அழுதாய்? என்று கேட்கிறார்கள்” என வைபவ் பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க:அபிஷேக் சர்மாவை பார்த்து அப்படி செய்யலாமா.. திக்வேஷ் ராதே செய்த செய்கை.. டென்ஷனான குட்டி யுவராஜ்.. களத்திலேயே மோதல்
காயம் அடைந்த ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக துவக்க இடத்தில் களம் இறங்கிய வைபவ், தன் திறமையை நிரூபித்ததால் சாம்சன் காயம் குணமடைந்து மீண்டும் அணியில் இடம்பெற்றாலும் அவரது இடத்தை விட்டு தற்போது மூன்றாவது வரிசையில் களம் இறங்கி விளையாடி வருகிறார். தற்போது இவருக்கு 14 வயது மட்டுமே ஆகி வரும் நிலையில் இவரது சிறப்பான ஆட்டத்தால் இன்னும் 20 வருடங்கள் ராஜஸ்தான் அணிக்கு கட்டாயமாக விளையாட முடியும் என்று தெரிகிறது. இளம் வயதிலேயே ராஜஸ்தான் சரியான நபரை கணித்து எதிர்கால தேவைக்கு வழி வகுத்துள்ளது.

