அபிஷேக் சர்மாவை பார்த்து அப்படி செய்யலாமா..  திக்வேஷ் ராதே செய்த செய்கை.. டென்ஷனான குட்டி யுவராஜ்.. களத்திலேயே மோதல்

ஐபிஎல் தொடரில் லக்னோ அணியை எதிர்த்து ஐதராபாத் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி மிட்சல் மார்ஷ் மற்றும் மார்க்ரம் ஆகியோரின் அதிரடி காரணமாக 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்களை குவித்தது. இந்தப் போட்டியில் தோல்வியடைந்தால், லக்னோ அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு முடிவுக்கு வரும். 

- Advertisement -

18 பந்துகளில் அரைசதம்

இதனால் ஐதராபாத் பேட்டிங் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதற்கேற்ப ட்ராவிஸ் ஹெட் இல்லையென்றால் என்ன, அபிஷேக் சர்மா தனியாளாகவே அதிரடி வேட்டையாடினார். ரவி பிஷ்னாய் வீசிய 7வது ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர்களை விளாசி தள்ளினார். இதன் மூலமாக 18 பந்துகளில் அபிஷேக் சர்மா அரைசதத்தை கடந்தார். 

- Advertisement -

அதேபோல் ஐதராபாத் அணியின் ஸ்கோர் 7 ஓவர்கள் முடிவிலேயே 98 ரன்களாக உயர்ந்தது. அப்போது 8வது ஓவரை வீசுவதற்கு திக்வேஷ் ராதே அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் 3வது பந்தில் அபிஷேக் சர்மா சிக்ஸ் அடிக்கும் முயற்சியில் அபிஷேக் சர்மா விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் 20 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

- Advertisement -

திக்வேஷ் ராதே சைகை

விக்கெட்டை பறிகொடுத்ததால் அபிஷேக் சர்மா விரக்தியுடன் வெளியில் செல்ல, அப்போது திக்வேஷ் ராதே அவரை பார்த்து “வெளியே போ” என்று சொல்வதை போல் சைகை காட்டியதோடு, அவரின் சிக்னேச்சர் கொண்டாட்டத்தை எழுதி அபிஷேக் சர்மாவின் முகத்திற்கு நேராக செய்து காட்டினார். இதனால் டென்ஷனான அபிஷேக் சர்மா, நேரடியாக அவருடன் மோதலில் ஈடுபட்டார்.

அப்போது லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், நடுவர்கள் ஆகியோர் சேர்ந்து இருவரையும் விலக்கிவிட்டனர். பெவிலியன் சென்ற பிறகும் கூட அதிருப்தியுடன் இருந்த அபிஷேக் சர்மா, நடுவர்களிடம் சென்று நேரடியாக புகார் அளித்தார். இதனால் திக்வேஷ் ராதேவுக்கு மீண்டும் அபராதம் விதிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles