இந்த வருஷம் தான் ஸ்ரேயாஸுக்கு அங்கீகாரம் கிடைக்குது.. போன தடவை வேற ஒருத்தர்னால அவர் உழைப்பு தெரியல.. கம்பீரை குறை கூறும் கவாஸ்கர்

நடப்பு ஐபிஎல் சீசன் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி எட்டாவது வெற்றியை பதிவு செய்து ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் ஸ்ரேயாஸ் அய்யர் குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

கடந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர், அதிக அளவில் வெற்றிகளை பெற்று கொல்கத்தா அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றுவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தார். இந்த சூழ்நிலையில் அப்போது பயிற்சியாளராக இருந்த கௌதம் கம்பீர்தான் இந்த வெற்றிகளுக்கு மிக முக்கிய காரணம் என ஸ்ரேயாஸ் ஐயரின் உழைப்பு பெரிய அளவில் மறைக்கப்பட்டது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் கொல்கத்தா அணியும் கடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் ஸ்ரேயாஸ் ஐயரை தக்க வைக்காமல் போக, இதனை லாவகமாக பயன்படுத்திக் கொண்ட பஞ்சாப் அணி அவரை கேப்டனாக நியமித்தது. மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்ட பஞ்சாப் அணிக்கே ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடி வெற்றிகளை பெற்றுத் தந்ததோடு பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கும் மிக முக்கிய காரணமாக அமைந்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் இதுகுறித்து பேசியிருக்கும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், ஸ்ரேயாஸ் ஐயரின் உழைப்பு கடந்த ஆண்டு பெரிய அளவில் தெரியவில்லை எனவும் அதை வேறு ஒருவர் எடுத்துக் கொண்டார் எனவும் கூறியிருக்கிறார். மேலும் இந்த ஆண்டு தான் ஸ்ரேயாஸ் ஐயரின் திறமை என்னவென்று பெரிய அளவில் வெளிவந்திருக்கிறது எனவும் ரிக்கி பாண்டிங் அதற்கான பாராட்டை பெற்றுக் கொள்ளவில்லை எனவும் அவர் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க:சச்சினுக்கு அடுத்ததா.. விராட் கோலிக்கு இந்த கவுரவத்தை மத்திய அரசு செய்யனும்.. சுரேஷ் ரெய்னா கோரிக்கை

இது குறித்து சுனில் கவாஸ்கர் விரிவாக கூறும்போது “கடந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்ற போது அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு போதுமான பாராட்டுக்கள் கிடைக்கவில்லை. அனைத்துப் புகழும் அப்போது வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டது. அணியின் வெற்றிகளுக்கு மிக முக்கிய பங்காற்றுவது கேப்டன் மட்டும் தானே தவிர ஆடுகளத்திற்கு வெளியே உட்கார்ந்து இருப்பவர் கிடையாது. இந்த சீசனில் பஞ்சாப் அணியை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்ற ஸ்ரேயாஸ் ஐயருக்கு போதிய பாராட்டுக்கள் கிடைக்கிறது. ரிக்கி பாண்டிங் தான் காரணம் என யாரும் கூறவில்லை” என கவாஸ்கர் பேசியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles