கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி டெஸ்ட் பார்மெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா விராட் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்கி அவரை கௌரவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவின் நட்சத்திர ஜாம்பவான் ஆன விராட் கோலி கடந்த சில தினங்களுக்கு முன்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவரது அறிவிப்பு பலரிடையே அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. இருப்பினும் பல முன்னாள் வீரர்கள் விராட் கோலியின் முடிவை வரவேற்றார்கள். மொத்தமாக 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் விராட் கோலி 9230 ரன்கள் குவித்து சாதனை படைத்திருக்கிறார்.
இதில் நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது விராட் கோலிக்கு வழங்க வேண்டும் என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கூறி இருக்கிறார். அதாவது இந்திய கிரிக்கெட்டை உலக அளவில் புகழ் பெற வைத்திருக்கும் கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான விராட் கோலிக்கு இந்த விருது வழங்கப்பட வேண்டும் என சுரேஷ் ரெய்னா கூறி இருக்கிறார். அதாவது நாட்டை உலக அரங்கில் புகழ்பெற செய்தவர்களுக்கு இந்த உயரிய விருது வழங்கப்படும். இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், டிராவிட் ஆகியோர் இதை வாங்கி இருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் இது குறித்து ரெய்னா கூறும்போது “விராட் கோலி இந்தியாவுக்காக பல சாதனைகளை புரிந்துள்ளார். எனவே இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது விராட் கோலிக்கு வழங்கப்பட வேண்டும். அதுவே மிகவும் நியாயமான விஷயமாக இருக்கும்” என சுரேஷ் ரெய்னா மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை விராட் கோலி 14,000க்கும் அதிகமான ரன்கள் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கிளாசிக் ஆட்டம்.. 3 ஆண்டுகளுக்கு பின் 5வது சதத்தை விளாசிய கேஎல் ராகுல்.. டெல்லி அணியை ஒற்றை ஆளாக காப்பாற்றி அசத்தல்
ஒருநாள் கிரிக்கெட்டை பொருத்தவரை சச்சின் டெண்டுல்கரின் சதங்களை முந்தி விராட் கோலி 51 சதங்கள் பதிவு செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே பாரத ரத்னா விருது பெற்ற கிரிக்கெட் வீரர் ஆவார். சச்சின் 2014 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 664 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர் இதுவரை கிரிக்கெட் உலகில் யாருமே செய்யாத 100 சதங்கள் அடித்த சாதனை படைத்தவர்.

