கிளாசிக் ஆட்டம்.. 3 ஆண்டுகளுக்கு பின் 5வது சதத்தை விளாசிய கேஎல் ராகுல்.. டெல்லி அணியை ஒற்றை ஆளாக காப்பாற்றி அசத்தல்

ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை எதிர்த்து டெல்லி அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய டூ பிளஸி – கேஎல் ராகுல் இணை நிதானமாக தொடங்கியது. சிராஜ் மற்றும் அர்ஷ்த் கான் பவுலிங்கில் ரன்கள் சேர்க்க முடியாமல் இருவருமே திணறினர்.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் 5வது சதம்

பின் டூ பிளஸி 5 ரன்களில் ஆட்டமிழக்க, பின்வந்த அபிஷேல் போரெல் தடுமாறினார். அப்போது ரபாடா வீசிய ஒரு ஓவரில் புல் ஷாட் மூலம் கேஎல் ராகுல் சிக்ஸ் அடிக்க, ஆட்டத்தில் அவரின் கைகள் ஓங்கியது. பின் ஒவ்வொரு ஓவருக்கும் பவண்டரி அடிக்க, டெல்லி அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. அதில் விராட் கோலி ஸ்டைலில் மிட் ஆன் மேல் அபாரமாக அடித்த சிக்ஸ் கிளாசிக் ரகமாக அமைந்தது.

- Advertisement -

சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல் 35 பந்துகளில் அரைசதம் கடக்க, அதன்பின் அதிரடியை அடுத்த கியருக்கு மாற்றினார். சாய் கிஷோர் பவுலிங் ஹாட்ரிக் பவுண்டரி அடிக்க, பிரசித் கிருஷ்ணா பவுலிங்கில் சிக்ஸ், பவுண்டரி அடித்து 60 பந்துகளில் சதத்தை எட்டினார். இதன் மூலமாக ஐபிஎல் தொடரில் கேஎல் ராகுல் 5வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

- Advertisement -

அசத்திய கேஎல் ராகுல்

அதேபோல் இந்த சீசனில் இதுவரை 4 இடதுகை பேட்ஸ்மேன்கள் சதமடித்துள்ள நிலையில், கேஎல் ராகுல் முதல் வலது கை பேட்ஸ்மேனாக சதம் விளாசி அசத்தி இருக்கிறார். இந்த சீசனில் தொடக்க வீரரை தவிர மற்ற அனைத்து பேட்டிங் வரிசையிலும் கேஎல் ராகுல் களமிறக்கப்பட்டு வந்தார். இதனால் முதல் 5 போட்டிகளுக்கு பின் அவரின் ஃபார்ம் மோசமாகியது.

ஆனால் தொடக்க வீரராக களமிறங்கிய முதல் போட்டியிலேயே கேஎல் ராகுல் சதம் விளாசி அசத்தி இருக்கிறார். 2022ஆம் ஆண்டு லக்னோ அணிக்காக அடித்த சதத்திற்கு பின், கேஎல் ராகுல் அடிக்கும் சதம் இதுவாகும். கேஎல் ராகுலின் பொறுப்பான ஆட்டத்தால் டெல்லி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்களை எடுத்து. சிறப்பாக ஆடிய ராகுல் 64 பந்துகளில்  4 சிக்ஸ், 14 பவுண்டரி உட்பட 112 ரன்களை விளாசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles