சாதனை தோல்வியை பெற்ற சிஎஸ்கே.. சேப்பாக்கத்தில் மயான அமைதி.. தோனியால் ஏமாந்த சென்னை அணி

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை எதிர்த்து கொல்கத்தா அணி விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 103 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதிகபட்சமாக சிவம் துபே 31 ரன்களையும், விஜய் சங்கர் 29 ரன்களையும் விளாசினர். கேகேஅர் அணி தரப்பில் நரைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

ஏமாற்றிய சிஎஸ்கே

இதன்பின் 104 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி கேகேஆர் அணி தரப்பில் சுனில் நரைன் – டீ காக் இணை களமிறங்கியது. தொடக்கம் முதலே டீ காக் அதிரடியில் விளாசி தள்ள, இன்னொரு பக்கம் சுனில் நரைன் சிக்சர்களாக அலறடித்தார். 4 ஓவர்களில் 46 ரன்கள் சேர்த்த நிலையில், டீ காக் 23 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

- Advertisement -

தொடர்ந்து சுனில் நரைன் அபாரமாக விளையாடி 18 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து வெளியேறினார்.  இதன்பின் ரஹானே – ரிங்கு சிங் கூட்டணி இணைந்து கேகேஆர் அணியின் வெற்றியை உறுதி செய்தது. 10.1 ஓவர்களில் கேகேஆர் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்த்யு வெற்றியை பெற்றது.

- Advertisement -

சாதனை தோல்வி

சிஎஸ்கே அணி தரப்பில் அன்சுல் கம்போக் மற்றும் நூர் அஹ்மத் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலமாக சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக 5வது தோல்வியை பெற்றுள்ளது. இதுவரை 6 போட்டிகளில் ஆடியுள்ள சிஎஸ்கே அணி ஒரு வெற்றி, 5 தோல்விகளுடன் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதேபோல் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக சிஎஸ்கே அணி தொடர்ந்து 5 தோல்விகளை பெற்று வருகிறது.

இதனால் வரும் போட்டிகளிலாவது சிஎஸ்கே அணி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷேக் ரஷீத், வன்ஷ் பேடி, ஸ்ரேயாஸ் கோபால் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் பட்சத்தில், சிஎஸ்கே அணியை அடுத்த சீசனுக்கு சிறப்பாக தயார் செய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles