சச்சின் தனது மகனின் திறமையை வீணடிக்கிறார்.. என்னிடம் விடுங்க 6 மாசத்துல அவர வேற மாறி மாத்தி காட்டுறேன் – யுவராஜ் சிங் தந்தை பேட்டி

மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வி அடைந்திருக்கிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தந்தையான யோக்ராஜ் சிங் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் சச்சின் டெண்டுல்கர் மகனான அர்ஜுன் டெண்டுல்கரை ரூபாய் 30 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது. இந்த சூழ்நிலையில் கடந்த போட்டியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ரா ஆகியோர் விளையாடாத நிலையில் அவருக்கு பதிலாக ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சில போட்டிகள் விளையாடி இருக்கும் அர்ஜுன் டெண்டுல்கர் வாய்ப்பு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் அவருக்கு பதிலாக புதிய பந்துவீச்சாளரான சத்யநாராயணன் வாய்ப்பு பெற்று விளையாடினார். இது பார்ப்பவரை சற்று கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. ஓரளவு திறமை இருக்கும் அர்ஜுனை தொடர்ச்சியான வாய்ப்பு கொடுத்து விளையாட வைத்தால் தான் அவர் சர்வதேச அளவில் திறமை பெற முடியும் என்று கருத்துக்கள் வெளிவரும் நிலையில் சச்சின் டெண்டுல்கர் தனது மகனின் திறமையை வீணடிக்கிறார் என்று யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் போது “அர்ஜுன் டெண்டுல்கர் என்னிடம் வந்தால் அவரை ஆறே மாதத்தில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் ஆக வருவதற்கு மாற்றி காட்டுவேன். அவருக்கு பேட்டிங்கில் நல்ல திறமை இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது. அவர் என்னிடம் முதலில் 12 நாட்கள் மட்டுமே பயிற்சி பெற்றார். அதற்கு பிறகு ரஞ்சிக்கோப்பையில் விளையாடி சதம் அடித்தார். யுவராஜ் சிங் மற்றும் சச்சின் டெண்டுல்கர் கூட அவரை எனது பொறுப்பின் கீழ் எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க:என்னுடைய முன்னாள் கேப்படனான இவர் தான் என் வெற்றிக்கு காரணம்.. அவருக்கு என் ஆட்டநாயகன் விருதைச் சமர்ப்பிக்கிறேன் – ஆஷுதோஷ் சர்மா உருக்கம்

அவர் முதலில் என்னுடன் 12 நாட்கள் மட்டுமே பயிற்சி பெற்று விளையாடினார். அப்போது சிறந்த பேட்ஸ்மேனாக வருவதற்கு திறமை இருக்கும் பையனை ஏன் வேக பந்து வீச்சளாராக வைத்து அவரது திறமையை வீணடிக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன். அவரால் சிறந்த பேட்டிங் ஆல் ரவுண்டராக வர முடியும்” என்று பேசி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles