ஐபிஎல் 2025 சீசனின் நான்காவது போட்டியிலேயே தொடரின் சிறந்த த்ரில்லரை ரசிகர்களுக்கு விருந்தாக தந்தது டெல்லி – லக்னோ போட்டி. பரபரப்பான திருப்பங்களுடன் கூடிய இந்தப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இறுதியில் 2 புள்ளிகளைத் தட்டிச் சென்றது. அதிரடியான ஃபினிஷ் செய்த இளம் வீரர் ஆஷுதோஷ் சர்மா, போட்டி முடிந்த பின்னர் ஆட்டநாயகன் விருதை தன் குருவுக்கு சமர்பிப்பதாக உருக்கமாகப் பேசினார்.
முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி, மிகவும் ஆக்ரோஷமாக துவக்கம் முதலே அடித்து நொறுக்கினர். நிச்சயம் 250 தாண்டும் என எதிர்பார்த்த போது, மார்ஷ் 72 & பூரன் 75 அவுட் ஆக, மற்ற அனைவரும் சொற்ப வெளியேறியதால் 209 ரன்களில் முடித்தனர். கடினமான இலக்கைத் துரத்திய டெல்லி, ஆரம்பத்திலேயே 7 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் 65 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்ததால், வெற்றி வாய்ப்பு முற்றிலும் லக்னோ அணிப் பக்கம் திரும்பியது.
இரு இளம் வீரர்கள் ஆஷுதோஷ் சர்மா மற்றும் விப்ராஜ் நிகாம் இருவரும் நம்பிக்கையைத் தகர விடாமல் எதிரணி பவுலர்களை பந்தாடினர். அறிமுக வீரர் விப்ராஜ் நியாம் தனது அதிரடியான 31 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். அறிமுக வீரர் விப்ராஜ் நிகாம் 15 பந்தில் 39 ரன்கள் விளாசி வெற்றிக்கு வித்திட்டார். அதனைத் தொடர்ந்து, ஆஷுதோஷ் சர்மா சிக்சர்களை பறக்கவிட்டு ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை இறுதி ஓவரில் தட்டிச் சென்றார்.
ஆஷுதோஷ் சர்மாவின் நம்பிக்கையும், அமைதியும் இந்த வெற்றியை அடைய முக்கியப் பங்காக இருந்தது. 20 பந்துகளில் 20 ரன்கள் எடுத்திருந்த ஆஷுதோஷ், அடுத்த 11 பந்துகளில் 46 ரன்களை விளாசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்கு எங்கு விட்டாரோ அதனை டெல்லி அணியில் இப்போது தொடர்ந்து செய்கிறார். இந்த அற்புதமான ஆட்டத்திற்குப் பிறகு, ” இந்த ஆட்டநாயகன் விருதை என் வழிகாட்டி ஷிகர் தவான் பாய்க்கு சமர்ப்பிக்கிறேன். ” என்று போட்டிக்கு நடந்த நிகழ்ச்சியில் அவர் கூறினார்.
அதன் பின்னர் அறைக்கு திரும்பிய அவர், ஷிகர் தவானுடன் வீடியோ அழைப்பில் பேசினார். ” தவான் பாஜி என்னை வாழ்த்தினார், நான் அவரை மிகவும் நேசிக்கிறேன். ” என்று மகிழ்ச்சியுடன் கூறினார். கடந்த சீசன், பஞ்சாப் அணியில் ஆஷுதோஷ் சர்மாவின் கேப்டனாக, நண்பனாக, வழி காட்டியாக அவருக்கு உறுதுணையாக இருந்துள்ளார் தவான். இன்று அவரின் வெற்றி, தன் சொந்த வெற்றியைப் போல தவான் கொண்டாடுவது அழகான சீனியர் – ஜூனியர் உறவைக் காட்டுகிறது.

