ஆர்சிபி எதிர்காலத்தை மனதில் வைத்து விராட் கோலி எடுத்த முடிவு.. யாரும் கேட்காதீங்க.. டி வில்லியர்ஸ் கருத்து

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் 3 நாட்களில் தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கவுள்ளது. இம்முறை ஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக ரஜத் பட்டிதார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆர்சிபி அணிக்காக சில சீசன்களே ஆடியுள்ள அவர், கேப்டனாக நியமனம் செய்யப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

ரசிகர்கள் பலரும் ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பை விராட் கோலி ஏற்பார் என்று எதிர்பார்த்திருந்தனர். கடைசி சில சீசன்களே விராட் கோலி ஆடவுள்ள நிலையில், விராட் கோலி தலைமையில் ஆர்சிபி அணி விளையாடும் என்று பார்க்கப்பட்டது. ஆனால் விராட் கோலி கேப்டன்சியை ஏற்க முன் வராததோடு, ரஜத் பட்டிதார் பெயரையும் முன் மொழிந்துள்ளார்.

- Advertisement -

டி வில்லியர்ஸ் கருத்து

- Advertisement -

இதுதொடர்பாக ஆர்சிபி ஜாம்பவான் டி வில்லியர்ஸ் கூறும் போது, ஆர்சிபி அணியின் இயக்குநர் மோ போபட் உடன் பயிற்சியாளர் ஆண்டி பிளவர் நீண்ட நாட்களாக ஆலோசித்திருப்பார் என்று நினைக்கிறேன். அதனால் புதிய கேப்டனுடன் ஆர்சிபி அணி களமிறங்கவுள்ளது. நிச்சயமாக இதுகுறித்து விராட் கோலியிடம் ஆலோசித்திருப்பார்கள். அதேபோல் விராட் கோலி பிடிவாதமாக கேப்டன்சியை நிராகரித்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால் அணிக்கு முக்கியமான முடிவை அணியின் நலனுக்காகவே எடுத்திருப்பார். விராட் கோலியின் இந்த முடிவு முதிர்ச்சியாக அமைந்துள்ளது. கடைசி சில சீசன்கள் என்பதால், அவர் கேப்டனாக செயல்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளது. ஆனால் ஆர்சிபி அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்திருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலி ஆதரவு

ரஜத் பட்டிதார் சிறந்த கேப்டனாக வழிநடத்தி ஆர்சிபி அணிக்கு கோப்பையை வென்று கொடுப்பாரா என்பதை காலமே முடிவு செய்யும். ஆனால் விராட் கோலியின் முழு ஆதரவும் ரஜத் பட்டிதாருக்கு இருக்கிறது. ரஜத் பட்டிதாரை ஒரு பேட்ஸ்மேனாகவும், மனிதராகவும் விராட் கோலிக்கு பிடித்திருக்கிறது. அவரின் பேச்சிலேயே அது நன்றாக தெரிகிறது.

கடந்த சீசனின் முதல் பாதியில் ஆர்சிபி அணி மிகப்பெரிய தடுமாற்றத்தை சந்தித்தது. ஆனாலும் கொஞ்சம் கூட மனம் தளராமல் ஆர்சிபி அணியின் தலைவிதியை மாற்றி காட்டினார். கடந்த சீசனில் அவருடன் பணியாற்றிய பின்னரே அவர் மீதான அனைவருக்கும் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles