நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ளது. இதற்காக சிஎஸ்கே அணியின் வீரர்கள் அனைவரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே ருதுராஜ் கெய்க்வாட், சிவம் துபே உள்ளிட்டோர் பயிற்சியில் ஈடுபட்டு வந்த போது, தற்போது சீனியர்களான தோனி, ஜடேஜா உள்ளிட்டோரும் இணைந்துள்ளனர்.
இதனால் சிஎஸ்கே அணி முழு உற்சாகத்துடன் தயாராகி வருகிறது. மெகா ஏலத்திற்கு பின் நடக்கும் ஐபிஎல் தொடர் என்பதால், இம்முறை சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் தீவிரமாக விவாதித்து வருகின்றனர். அதன்படி சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பாதி ராயுடு சிஎஸ்கே பிளேயிங் லெவன் எப்படி இருக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார்.
சிஎஸ்கே பிளேயிங் 11
அதில், தொடக்கம் வழக்கம்போல் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விளையாட வேண்டும். அவருக்கு துணையாக கான்வேவை விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். ஏற்கனவே 2023ல் இவர்கள் இருவரும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். தொடர்ந்து நம்பர் 3 வரிசையில் சாம்பியன்ஸ் டிராபியில் அசத்திய ரச்சின் ரவீந்திராவை விளையாட வைப்பேன்.
நம்பர் 4ல் தீபக் ஹூடா, ராகுல் த்ரிப்பாட்டி அல்லது விஜய் சங்கர் ஆகிய 3 பேரில் ஒருவர் விளையாடலாம். அதன்பின் நம்பர் 5ல் பவர்ஃபுல் ஹிட்டரான சிவம் துபேவை வைப்பேன். அவரால் ஸ்பின்னர்களை எளிதாக விளாசி தள்ள முடியும். தொடர்ந்து நம்பர் 6ல் ரவீந்திர ஜடேஜாவை விளையாட வைக்க வேண்டும். நம்பர் 7ல் தோனி இருப்பார்.
நூர் அஹ்மத் அல்லது சாம் கரண்?
அவருக்கு பின் நம்பர் 8ல் சாம் கரண் களமிறங்க வேண்டும். நூர் அஹ்மத்-க்கு முன்பாக சாம் கரணுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். அதன்பின் ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஸ்வின், இளம் வேகப்பந்துவீச்சாளரான அன்சுல் கம்போஜ், தொடர்ந்து பதிரானா விளையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இம்பேக்ட் பிளேயராக இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சிஎஸ்கே பிளேயிங் லெவன்: ருதுராஜ் கெய்க்வாட், கான்வே, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிப்பாட்டி, சிவம் துபே, ஜடேஜா, தோனி, சாம் கரண், அஸ்வின், அன்சுல் கம்பேஜ், பதிரானா

