விராட் கோலியை கேப்டனா அறிவிக்காமல்.. இளம் வீரரை அறிவிக்க இந்த விஷயம் மட்டுமே காரணம் – ஆர்சிபி கோச் பேட்டி

வருகிற மார்ச் மாத இறுதியில் ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா நடைபெற உள்ள நிலையில் இதற்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் மிகத் தீவிரமான முறையில் தயாராகி வருகிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் ஆர்சிபி அணியின் கேப்டனாக இளம் வீரர் ராஜத் பட்டிதார் அறிவிக்கப்பட்ட நிலையில் விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்படாமல் போனதற்கான காரணம் குறித்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன்டி பிளவர் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கிரிக்கெட் அணி இந்த முறையை ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு சிறந்த வீரர்களை மெகா ஏலத்தில் வாங்கியது. பில் சால்ட், புவனேஸ்வர் குமார், லிவிங்ஸ்டன் என பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு தரமான வீரர்களை வாங்கி அணியை சிறப்பாக கட்டமைத்தது. எனவே இந்த புதிய அணிக்கு விராட் கோலி கேப்டனாக அறிவிக்கப்படுவார் என்று சமீபத்தில் கருத்துக்கள் வெளியாகின.

- Advertisement -

மேலும் ஆர்சிபி நிர்வாகமும் ரசிகர்கள் விரும்பும் கேப்டன் விரைவில் நியமிக்கப்படுவார் என்று அறிவித்தது. இந்த சூழ்நிலையில் இன்று எதிர்பாராத விதமாக ரஜத் பட்டிதார் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவர் ஏற்கனவே கடந்த இரண்டு வருடங்கள் பெங்களூர் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் விராட் கோலி ஏன் கேப்டனாக அறிவிக்கப்படவில்லை என்பது குறித்து பயிற்சியாளர் ஆன்ட்டி பிளவர் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” கேப்டனுக்கான உரையாடலில் நாங்கள் விராட் கோலியுடன் பேசிய போது அவர் மிகவும் நேர்மையாக இருந்தார். மேலும் ஒரு அனுபவமான வீரராக தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார். வரப் போகும் சீசனுக்காக அவர் கொண்டிருக்கும் உற்சாகம் மற்றும் ஆர்வம் மிகப்பெரியது. கடந்த முறை அவர் சீசனை மாற்றியமைத்த விதத்தில் அவருக்கு பெரிய பங்கு உண்டு. எனவே அவரை பாராட்டியே ஆக வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க:சாம்பியன்ஸ் டிராபியில் கடைசி நிமிடத்தில் வருண் சக்ரவர்த்தி எதற்கு ? கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்களுக்கு சிறப்புச் சலுகை செய்கிறாரா கம்பீர் ? அஷ்வின் மற்றும் ரசிகர்கள் கேள்வி

மேலும் தனிப்பட்ட முறையில் பட்டிதாரை விராட் கோலிக்கு மிகவும் பிடிக்கும். மேலும் ஒரு நல்ல மனிதராகவும் அவரை அவருக்கு பிடிக்கும். அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு விராட் கோலி மிக உற்சாகமடைந்தார். மேலும் பெங்களூர் அணியில் அவருக்கு எப்போதுமே விராட் கோலி ஆதரவாக இருப்பார். மேலும் கேப்டன்ஷிப் அவருக்கு ஒரு பெரிய விஷயமே கிடையாது” என்ன பேசி இருக்கிறார். எனவே வரப்போகும் ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணி புதிய கேப்டன் உடன் விளையாடும் என எதிர்பார்க்கலாம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles