சாம்பியன்ஸ் டிராபியில் கடைசி நிமிடத்தில் வருண் சக்ரவர்த்தி எதற்கு ? கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்களுக்கு சிறப்புச் சலுகை செய்கிறாரா கம்பீர் ? அஷ்வின் மற்றும் ரசிகர்கள் கேள்வி

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் நடக்கிறது. இதில் பங்குபெறும் இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு மேலும் நேற்று சில மாற்றங்களையும் சந்தித்தது.

- Advertisement -

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டியில் பும்ராவுக்கு ஏற்பட்ட காயத்தால் அவர் அணியை விட்டு விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் மூன்றாவது ஒப்பனராக தேர்வு செய்யப்பட்டிருந்த ஜெய்ஸ்வால் அணியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு மாற்றாக வருண் சக்ரவர்த்தி அணியில் இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

வருண் சக்கரவர்த்தியை அணியில் சேர்த்து பற்றி ரவிச்சந்திரன் அஷ்வின் வெகுவாக விமர்சித்ததோடு கம்பீர் மற்றும் அகர்க்கரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கனவே அணியில் நான்கு ஸ்பின்னர்கள் இருக்கும் பட்சத்தில் ஐந்தாவது சுழற் பந்துவீச்சாளராக வருண் சக்ரவர்த்தி இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அஷ்வின் பேசியதாவது, ” இந்திய அணி அவர்களது அனைத்துப் போட்டிகளையும் துபாயில் விளையாடும் போது எதற்காக ஐந்து ஸ்பின்னர்கள் ? 3 அல்ல 4 ஸ்பின்னர்கள் என்றால் பரவாயில்லை புரிந்துக் கொள்ளலாம், ஆனால் 5 என்பது தேவையற்றது. இதற்காக ஜெய்ஸ்வாலை அனையை விட்டு தூக்கியும் உள்ளார்கள். “

” ஜடேஜா, அக்ஷார் படேல் நிச்சயம் விளையாடுவார்கள். மேலும் குல்தீப் யாதவ் அணியில் இருப்பார் என்பதிலும் சந்தேகமில்லை. இவர்களோடு சேர்த்து வருண் சக்ரவர்த்தியை ஆட வைத்தால் நாம் ஒரு வேகப்பந்து வீச்சாளரை இழக்க நேரிடும். இதனைத் தாண்டி மிகப் பெரிய கேள்வி என்னவென்றால் துபாயில் பந்து திரும்புமா ? இந்திய அணி தேர்வில் என்பது திருப்தியே இல்லை. ” என அஷ்வின் கம்பீர் மற்றும் அகர்க்கரின் கடைசி நிமிட அணித் தேர்வை கடுமையாக விமர்சித்துள்ளார்.

- Advertisement -

அஷ்வின் கேள்வியைப் போலவே சமூக வலைதளங்களிலும் இது குறித்து ரசிகர்கள் பதிவிட்டுள்ளார்கள். ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி இருவரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கம்பீர் கோட்டாவில் சிறப்புச் சலுகைகள் பெறுகிறார்களா ? என டிவிட்டரில் கேள்விகள் குவிந்துள்ளன.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles