விராட் கோலி கேரியரில் இந்த ஒன்னு மட்டும் தான் மிச்சம் இருக்கு.. அதையும் பண்ணிட்டா ஓவர் – யூனிஸ்கான் பேட்டி

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பல ஆண்டுகள் கழித்து அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை நடத்த உள்ளது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் யூனிஸ்கான் விராட் கோலிக்கு பாகிஸ்தானில் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் எனவும், அவரது கேரியரில் இந்த ஒரு விஷயம் மட்டும்தான் எஞ்சி இருக்கிறது எனவும் கூறி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி கடைசியாக 2008ஆம் ஆண்டு பாகிஸ்தானில் பயணம் மேற்கொண்டு விளையாடியது. அதற்குப் பிறகு இரு உள்நாடுகளின் விவகாரம் காரணமாக இதுவரை இந்தியா பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எந்த தொடரிலும் விளையாடியது இல்லை. ஆனால் பாகிஸ்தான் அணி ஐசிசி தொடர்களில் இந்தியா வந்து விளையாடுகிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஐசிசி தொடரான சாம்பியன்ஸ் டிராபி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் நிலையில், இந்தியா பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

- Advertisement -

ஆனால் பிசிசிஐ இந்த விஷயத்தில் பிடிவாதமாக இருப்பதாகவும் பாகிஸ்தானில் விளையாட இருக்கும் இந்திய போட்டிகளை இலங்கைக்கு அல்லது துபாய்க்கு மாற்றும் படியும் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் இந்தியா வந்து விளையாடுவதை போல இந்திய அணியும் பாகிஸ்தான் வந்து விளையாட வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இந்திய வீரர்களில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு பாகிஸ்தானில் அதிக அளவில் ரசிகர் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக இந்திய வீரர் விராட் கோலிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பாகிஸ்தானில் இருக்கின்றனர். இந்த நிலையில் விராட் கோலி பாகிஸ்தான் வந்து விளையாடி அந்தக் குறையையும் போக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் யூனிஸ்கான் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க:ஏன் பயப்படுறீங்க.. பாண்டியாவை எதுக்கு தூக்கினோம்னு உண்மைய சொல்லுங்க – முன்னாள் தேர்வு குழு தலைவர் விளாசல்

இது குறித்து யூனிஸ்கான் கூறும் பொழுது “விராட் கோலி 2025ஆம் ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பாகிஸ்தான் வந்து விளையாட வேண்டும். அதுவே எங்களது விருப்பமாகவும் இருக்கிறது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விராட் கோலி விளையாடுவது மட்டுமே அவரது கேரியரில் மீதம் இருக்கும் சாதனையாக இருக்கும். இங்கே வந்து விளையாடி சதம் விளாசி விட்டால் அதுவும் நிவர்த்தியாகி விடும்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles