கம்பீரப் பத்தி எனக்கு நல்லா தெரியும்.. இந்த 2 திட்டங்களை நிச்சயம் கொண்டு வருவார்- தினேஷ் கார்த்திக் பேட்டி

நடந்து முடிந்த டி20 உலக கோப்பையோடு ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக, அவருக்கு பதிலாக தற்போது கௌதம் கம்பீர் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்று இருக்கிறார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் கௌதம் கம்பீர் குறித்து சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த மாதம் இறுதியில் நடைபெற இருக்கிற இலங்கையில் அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களில் இருந்து கம்பீர தனது பயிற்சியாளர் பணியை துவங்க இருக்கிறார். கம்பீர் வெற்றிக்காக எதையும் செய்யக்கூடிய மனிதர் என்றும், ஆக்ரோஷமாக செயல்பட கூடியவர் என்றும் பொதுவான கருத்துக்கள் வெளியே கூறப்படுவது உண்டு. இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் கம்பீர் பற்றியும் இந்த மாதிரியான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

தினேஷ் கார்த்திக் கம்பீர் பற்றி கூறும் பொழுது கம்பீர் எப்பொழுதுமே சர்வதேச தரத்தில் விளையாடக்கூடிய நபர்களை பாதுகாக்கக் கூடிய நபர் என்றும், வீரர்கள் எப்போதுமே தனித்து விடப்பட்டது போல உணரக்கூடாது என்றும் அணியில் சில மாற்றங்களை கொண்டு வரப் போகிறார் என்றும் கூறியிருக்கிறார்.

இது குறித்து தினேஷ் கார்த்திக் விரிவாக கூறும்பொழுது “ஐபிஎல் தொடரில் நான் முதலில் டெல்லி அணிக்காக விளையாடிய போது டெல்லி அணியில் ஷேவாக் கேப்டனாக பணிபுரிந்தார். அதற்குப் பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து கௌதம் கம்பீர் கேப்டனாக பொறுப்பேற்றார். நான் அப்போது துணை கேப்டன் ஆக பதவி வகித்தேன். கம்பீர் சிறந்த கேப்டன் எப்போதுமே அனைத்து சரியான திட்டங்களை தீட்டுவதில் வல்லவர்.

- Advertisement -

கம்பீர் இந்திய அணிக்கு இந்த இரண்டு விஷயங்களை நிச்சயம் கொண்டு வருவார். முதலாவதாக கம்பீர் எப்போதுமே விளையாட்டு வீரர்களுக்கான மனிதர். அவர் நிச்சயமாக வீரர்களை பாதுகாக்க கூடியவர். இது சர்வதேச கிரிக்கெட்டை பொருத்தவரை இந்த விஷயம் மட்டும் எப்போதுமே முக்கியமானது. இதில் விளையாடும் வீரர்கள் எப்போதும் தனித்து விடப்பட்டது போன்ற உணர்வை பெறவே கூடாது.

இதையும் படிங்க:தோனிய பத்தி உங்களுக்கு என்ன தெரியும்.. என்ன முட்டாள்தனமான கேள்வி இது.. தோனிக்கு ஆதரவாக பேசிய ஹர்பஜன் சிங்

இரண்டாவதாக நிச்சயம் இந்திய அணிக்குள் புதிய திட்டங்களை கொண்டு வருவார்.கம்பீர் மிகவும் தீவிரமான நபர். அவர் எப்படிப்பட்டவர் என்றால், அணிக்காக எதையும் செய்யக் கூடியதில் தயாராக இருக்கக்கூடிய நபராக எப்போதுமே இருப்பார்” என்று தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார். தற்போது இந்திய அணிக்குள்ளும் கௌதம் கம்பீர் தற்போது அதிரடியான மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார். எடுத்துக்காட்டாக டி20 அணியில் துணை கேப்டன் ஆக பதவி வகித்த ஹர்திக் பாண்டியாதான் இந்திய அணியின் அடுத்த டி20 கேப்டன் ஆக வந்திருக்க வேண்டும். ஆனால் மாற்றத்தை எதிர்பார்த்த கம்பீர் அவருக்கு பதிலாக தற்போது சூரியகுமார் யாதவை கேப்டனாக கொண்டு வந்திருக்கிறார். இன்னும் இந்திய அணிக்குள் என்ன மாற்றங்களை கொண்டு வரப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles