இந்திய அணிக்கு இந்த டி20 உலக கோப்பை தொடரை வென்று கொடுத்ததன் மூலம் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய மூன்று முன்னணி வீரர்களும் தற்போது டி20 ஃபார்மெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கின்றனர்.
இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரரும், தேர்வுக்குழு உறுப்பினருமான சபா கரீம் இந்தியாவின் அடுத்த கேப்டன் குறித்து சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
விராட் கோலிக்கு பிறகு 2021ம் ஆண்டு கேப்டன் பொறுப்பை ஏற்ற ரோஹித் சர்மா, மூன்று வடிவத்தொடர்களிலும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியை மேலும் முன்னோக்கி நகர்த்தி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் கடந்த 2023 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பையை சிறிது தவறால் இந்திய அணி தவறவிட்டது. இருப்பினும் நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் எந்த வித தவறையும் செய்யாமல் இந்திய அணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில் இந்த டி20 தொடரோடு விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ஜடேஜா போன்ற வீரர்கள் ஓய்வை அறிவித்திருக்கின்றனர். எனினும் இவர்களது இடத்தை நிரப்ப இந்திய இளம் வீரர்களான கில், ருத்ராஜ், அபிஷேக் ஷர்மா போன்ற வீரர்கள் இருந்தாலும், ரோகித் சர்மாவிற்கு பிறகு கேப்டன் பொறுப்பை ஏற்று நடத்த கில்லை விட ஹர்திக் பாண்டியாவுக்கே அதிக அனுபவமும், திறமையும் இருப்பதாக முன்னாள் தேர்வு குழு உறுப்பினர் சபா கரிம் கூறி இருக்கிறார்.
இதுகுறித்து சபா கரீம் விரிவாக கூறும் பொழுது “இந்திய அணி தற்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் கில்லை கேப்டன் ஆக அறிவித்திருக்கிறது. கில்லை மூன்று வடிவத்தொடர்க்கும் சரியான வீரராக இந்திய அணி நிர்வாகம் தற்போது பார்க்கிறது. இந்திய அணியை இனி வரும் காலங்களில் முன்னோக்கி நகர்த்த கில் சரியானவராக இருப்பார் என்று அறிந்து அவருக்கு தற்போது வாய்ப்பை வழங்கி இருக்கிறது.
எனவே ஒரு பேட்ஸ்மேன் ஆக மட்டுமின்றி கேப்டன் ஆகவும் அவருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. இருப்பினும் தற்போது ரோகித் சர்மாவிற்கு பிறகு ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக இருக்கிறார். ரோகித் சர்மாவிற்கு பிறகு அவர்தான் சரியான கேப்டனாக இருப்பார் என்று தெரிகிறது. அது மட்டுமல்லாமல் ஓய்வு பெற்ற விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜடேஜாவின் இடத்தை நிரப்ப கில், ருத்ராஜ் மற்றும் அபிஷேக் ஷர்மா போன்ற வீரர்கள் இருக்கின்றனர்.
இதையும் படிங்க:“டிராவிட் அப்படி சொல்லவில்லையென்றால் பைனலில் ஆடியிருக்கவே..” – பைனலுக்கு முன் விராட் கோலி – டிராவிட் இடையே நடந்த உரையாடல்!
இவர்கள் மூன்று பேரின் இடத்தை நிரப்ப அவர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் இப்போது கேப்டனாக இருக்கும் பொறுப்பு ஹர்திக் பாண்டியாவுக்கே அதிகமாக இருப்பதாக நினைக்கிறேன்” என்று கூறி இருக்கிறார். இந்த சூழ்நிலையில் ஹர்திக் பாண்டியா அடுத்த நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடருக்கு அவரே கேப்டனாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

