இந்திய ரசிகர்கள் ஹாஸ்பிடல் பில்லை என்னை கட்ட சொல்கிறார்கள்.. விராட் கோலி ரசிகர்கள் அதற்கும் ஒரு படி மேல்.. ரசிகர்கள் குறித்து பேட் கம்மின்ஸ் வருத்தம்

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ்க்கு ரசிகர்கள் வரவர அதிகரித்து வருகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அதிலும் இந்திய ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் கம்மின்ஸ்க்கு இந்திய ரசிகர்கள் உதவி கேட்டு தினமும் குறுஞ்செய்திகளை அனுப்புகிறார்கள் எனவும், விராட் கோலி ரசிகர்கள் இதற்கும் ஒரு படி மேலே சென்று தன்னை திட்டுவதாகவும் கூறி இருக்கிறார்.

- Advertisement -

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா அணி உலகக் கோப்பையை வென்றது. ஏற்கனவே டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, ஆஷஸ் தொடர், மற்றும் தற்போது 50 ஓவர் உலகக் கோப்பை என வரிசையாக ஆஸ்திரேலியா அணிக்கு கோப்பைகளை வென்று கொடுக்கும் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய கேப்டன்களிலேயே தனித்து நிற்கிறார்.

- Advertisement -

பொதுவாக ஆஸ்திரேலிய கேப்டன்கள் என்றால் ஆக்ரோஷம் கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் கம்மின்ஸ் தோனி போன்று எதையுமே கூலாக அணுகி வெற்றிகளை காண்கிறார். இதற்காகவோ என்னவோ அவருக்கு ரசிகர் பட்டாளம் தற்போது அதிக அளவில் இருக்கிறது . மேலும் உதவி செய்வதிலும் பெருந்தன்மை கொண்டவரான கம்மின்ஸ் சமீபத்தில் இந்தியாவில் கொரோனா வந்தபோது தனது நன்கொடையாக ஒரு கோடி வழங்கினார்.

மேலும் தான் எவ்வளவு சம்பாதித்தாலும் அதனை தொண்டு நிறுவனங்களுக்கு செலவு செய்வதில் ஆர்வம் கொண்டவரான கம்மின்ஸ், சமீபத்தில் இந்திய ரசிகர்கள் குறித்து தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். இது குறித்த அவர் கூறும் பொழுது
“இந்திய ரசிகர்கள் ஆஸ்திரேலியாவில் எனது வீட்டின் முகவரியை கண்டுபிடித்து விட்டார்கள். அதில் சில ரசிகர்கள் எனக்கு பண உதவி வேண்டும் என்னுடைய ஹாஸ்பிடல் பில் இது என்று தொடர்ந்து கடிதங்களை அனுப்புகிறார்கள்.

- Advertisement -

இவ்வாறு எனக்கு பலமுறை இது போன்ற சம்பவங்கள் நடந்து விட்டது. மேலும் விராட் கோலி ரசிகர்கள் இதற்கு ஒரு படி மேலே இருக்கிறார்கள். ஒரு முறை நான் விராட் கோலி குறித்து எனது கருத்தை தெரிவித்திருந்தேன். இத்தனைக்கும் நான் அவரை குறையோ, திட்டவோ நான் எதுவும் செய்யவில்லை. விராட் கோலி ஒரு சிறந்த வீரர். அவர் எங்களுக்கு எதிராக சதம் அடிக்க கூடாது என்று தான் கூறியிருந்தேன். ஆறு மாதம் கழித்து விராட் கோலி சதம் அடித்தவுடன் கோலி ரசிகர்கள் என்னை டேக் செய்து வசை பாடத் தொடங்கி விட்டனர்.

இதையும் படிங்க:விராட் கோலி இருக்கிற ஃபார்முக்கு 5 பந்துகள் கூட வெயிட் பண்ண வேணாம்.. இந்திய அணி இத கண்டிப்பா பண்ணியே ஆகணும்.. கூறுகிறார் சுனில் கவாஸ்கர்

என்னுடைய மொபைலுக்கு குறுஞ்செய்திகளும் விராட் கோலி ரசிகர்களிடமிருந்து வர ஆரம்பித்தது. அதிலும் என்னை திட்டுகிறார்கள் இது போன்ற சம்பவங்கள் எனக்கு பலமுறை நடந்து விட்டது” என்று கம்மின்ஸ் தனது வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles