கம்மின்ஸ்க்கு தொட்டதெல்லாம் தங்கம் போல.. சன்ரைசர்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.. 36 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி தோல்வி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையே இரண்டாவது எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி மிகச் சிறப்பாக விளையாடி 36 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

- Advertisement -

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சினை தேர்வு செய்தது. இதன்படி பேட்டிங் தொடங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் போல்டின் முதல் ஓவரிலேயே அபிஷேக் ஷர்மா 12 ரன்களில் வெளியேறினார். அதற்குப் பிறகு ட்ராவிஸ் ஹெட்டுடன், ராகுல் திருப்பாதி பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

- Advertisement -

இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 21 பந்துகளில் 42 ரன்கள் குவித்தது. பின்னர் திருப்பாதி 15 பந்துகளில் 37 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டம் இழந்து வெளியேற, அதற்குப் பின்னர் களமிறங்கிய மார்க்ரம் இந்த முறையும்,ஒரு ரன்னில் வெளியேறினார். அதற்குப் பிறகு களம் இறங்கிய கிளாஸன் ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடினார். அதற்குள் எதிர்பாராதவிதமாக ஹெட் 34 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

அதிரடியாக விளையாடிய கிளாஸன் 34 பந்துகளில் நான்கு சிக்ஸர்களுடன் 50 ரன்கள் குவிக்க, இறுதியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணித்தரப்பில் போல்ட், ஆவேஸ் கான் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களம் இறங்கியது. பவர் பிளேவரை சிறப்பாக சென்று கொண்டிருந்த ராஜஸ்தான் அணிக்கு அதற்கு பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. பவர் பிளேவில் ஆறு ஓவர்களில் 51 ரன்கள் குவித்த நிலையில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

- Advertisement -

அணியின் தொடக்க ஆட்டக்காரர் கேட் மோர் 10 ரன்களிலும், கேப்டன் சஞ்சு சாம்சன் 10 ரன்களிலும், இந்த சீசனில் சிறப்பாக விளையாடிய ரியான் பராக் ஆறு ரன்களிலும் வெளியேறினார்கள். இதற்கிடையில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 42 ரன்களில் வெளியேற, அதற்குப் பிறகு ராஜஸ்தான் அணியின் வீழ்ச்சியை தடுக்க முடியவில்லை.
இதில் துரேல் மட்டும் சிறப்பாக விளையாடி 35 பந்துகளில் ஏழு பவுண்டரிகள், இரண்டு சிக்சர்களுடன் 56 ரன்கள் குவித்தார்.

இதையும் படிங்க:இந்தத் தமிழக வீரரை ஏன் உலகக் கோப்பையில் எடுக்கல.? பும்ராவுக்கு அருமையான ஜோடி கிடைத்திருக்கும்.. மேத்யூ ஹைடன் கருத்து

இதனால் ராஜஸ்தான் அணி இறுதியாக 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் மட்டுமே குவித்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருக்கும் சன்ரைசர்ஸ் அணி வருகிற ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தா அணியுடன் இறுதி போட்டியில் மோத உள்ளது. சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கம்மின்ஸ்க்கு தொட்டதெல்லாம் தங்கம் போல இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றார். கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி உலகக் கோப்பை வென்றார். தற்போது ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணியை இறுதி போட்டிக்குள் அழைத்துச் சென்று இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles