டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்த டி20 அணியில் ரிங்கு சிங் சேர்க்கப்படாதது மிகப்பெரிய சர்ச்சையானது.
ரிங்கு சிங் சேர்க்கப்படாதது குறித்து இந்திய முன்னாள் தேர்வு குழு தலைவர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட முன்னணி கிரிக்கெட் விமர்சகர்கள் சரமாரியான கருத்துக்களை விளாசிய நிலையில், அதற்கு தகுந்த விளக்கத்தை அண்மையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அஜித் அகர்க்கர் மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான குழு அளித்தது.
மேலும் டி20 உலக கோப்பை அணி சம நிலையில் இருப்பதாகவும் இந்த தமிழக வீரர் இருந்திருந்தால் அணி நூறு சதவீதம் பலம் வாய்ந்ததாக இருந்திருக்கும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹேடன் கூறியிருக்கிறார். இந்திய அணியை பொறுத்தவரை அதன் பேட்டி ஆர்டர் எப்போதுமே பலம் வாய்ந்ததாக அமையும்.
இந்த முறையும் அது போலவே விராட் கோலி, ரோஹித் சர்மா, சூரியகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால் போன்ற நட்சத்திர பட்டாளம் அடங்கி இருக்கிறது. ஆனால் பந்துவீச்சுதான் தற்போது கேள்விக்குறியாக இருக்கிறது. வேகப்பந்துவீச்சாளர் பும்ராவை தவிர மற்ற வேகப்பந்து வீச்சாளர்களான முகமது சிராஜ் மற்றும் ஹர்ஸ்தீப் சிங் ஆகியோரது சமீபத்திய ஐபிஎல் பார்ம் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. மேலும் இந்திய அணி எதற்காக நான்கு ஸ்பின்னர்கள் என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ரோகித் சர்மா உலகக் கோப்பையின் போது உங்களுக்கான விடை கிடைக்கும் என்று கூறியிருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் தற்போது சன்ரைசர்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் நடராஜனை இந்திய டி20 அணியில் தேர்வு செய்யாததும் சர்ச்சையானது. இதுகுறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஹைடன் இந்திய அணி குறித்துக் கூறும் பொழுது
“இந்திய அணி தற்போது சமநிலையில் இருப்பதாக நினைக்கிறேன். இடது வலது காம்பினேஷன்களான ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் இருக்கிறார்கள்.
மேலும் மூன்றாவது வரிசையில் விராட் கோலி களமிறங்குகிறார். இவர்களைத் தொடர்ந்து சூரியகுமார் யாதவ் களமிறங்குவதால் பேட்டிங் ஆர்டர் வலுவாக உள்ளது. சூரியகுமாரர் யாதவ் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் புதுமையான கிரிக்கெட்டை விளையாடக் கூடியவர்கள். எனவே பேட்டிங் ஆர்டர் வலுவாக உள்ளது. ஆனால் பந்துவீச்சை பொறுத்தவரை நடராஜன் இதில் இடம் பெற்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க:விராட் ஓய்வுக்குப் பிறகு வாயை மூடுனு யார் சொல்லுவா.? கோலியைப் போல இன்னொரு ஆள் வேணும்.. மைக்கேல் வாகன் கூறும் கருத்து
அவர் தற்போது ஐபிஎல்லில் சிறப்பான பந்திவீச்சினை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்திய அணியில் இறுதிக்கட்டத்தில் பும்ராவுடன் ஜோடி சேர்ந்து நடராஜன் போன்ற பந்துவீச்சாளர் இருந்தால் இந்திய அணிக்கு வலுவாக அமையும். இறுதிக்கட்ட ஓவர்களில் நடராஜன் சிறப்பான செயல் திறனை வெளிப்படுத்தக் கூடிய வீரர். எனவே அவர் இடம் பெற்றிருந்தால் இந்திய அணி இன்னும் வலுவாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்” என கூறி இருக்கிறார்.

