சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணி ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியிருக்கிறது. இதுவரை 13 போட்டிகள் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது.
ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் இதுவரை 500 ரன்கள் மேல் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வைத்திருக்கிறார். டி20 உலக கோப்பையில் இவர் தேர்வானது குறித்த கௌதம் கம்பீர் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியம் இவரை டி20 உலக கோப்பைக்கு விளையாட தேர்வு செய்துள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் 2015ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி, தனது இரண்டாவது போட்டியில் 2019ஆம் ஆண்டு விளையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு 2021ஆம் ஆண்டு வரை இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது எல்லாம் இந்திய ரசிகர்கள் இவருக்கு ஆதரவாக நின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் 2021ஆம் ஆண்டு தனக்கு கிடைத்த வாய்ப்பை சஞ்சு சாம்சன் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்றும் கூறலாம். அதன் பிறகு போராடி கிடைத்த இந்த வாய்ப்பை சிறப்பாக செயல்பட்டால் உலகமே திரும்பிப் பார்க்கும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும் போது
“இப்போது நீங்கள் உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள். இது உங்களுக்கு கிடைத்த ஒரு பொன்னான வாய்ப்பு. நீங்கள் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு வெற்றிகளை தேடித் தர வேண்டும். ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவமும் உங்களுக்கு உண்டு.
எனவே அங்கு நேரம் வரும் வரை காத்திருந்து அதற்குப் பிறகு விளையாடுவதற்கு நீங்கள் புதிய வீரர் கிடையாது. நீங்கள் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் ஐபிஎல் கிரிக்கெட்டில் தற்போது விளையாடிக் கொண்டும் இருக்கிறீர்கள். அதனால் உலகக்கோப்பையில் விளையாட போகும் சாம்சன் தன்னால் என்ன சாதிக்க முடியும் என்பதை இந்த உலகிற்கு காட்ட வேண்டும்.
இதையும் படிங்க:எல்லோராலும் தோனி ஆகி விட முடியாது.. தோனியின் சீக்ரெட் ஃபார்முலா ஆர்சிபியை விழித்தும் .. ரகசியம் கூறும் முகமது கைஃப்
அதுவும் உலகக்கோப்பை போன்ற ஒரு தொடரில் நீங்கள் ஜொலிக்கும் போது மொத்த உலகமே உங்களை திரும்பிப் பார்க்கும். அவர் எப்படிப்பட்ட வீரர் என்பதை சொல்ல எனக்கு ஐந்து நிமிடங்கள் பத்தாது. மனதளவிலும் திறன் அளவிலும் வளரவில்லை எனில் நீண்ட காலம் கிரிக்கெட்டில் தாக்குப் பிடிக்க முடியாது. உங்களால் சூழ்நிலையை சிறப்பாக கையாள முடியும். அதே போல சிறந்த பேட்ஸ்மேன் ஆகவும் வர முடியும். ஐபிஎல் கேப்டனாக செயல்படும் சாம்சன் சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வீரராக வரவேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

