எல்லோராலும் தோனி ஆகி விட முடியாது.. தோனியின் சீக்ரெட் ஃபார்முலா ஆர்சிபியை விழித்தும் .. ரகசியம் கூறும் முகமது கைஃப்

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் தற்போது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டி வரும் நிலையில், இதில் முக்கிய போட்டியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடும் போட்டி வருகிற சனிக்கிழமை நடைபெற உள்ளது.

- Advertisement -

இதில் வெற்றி பெறும் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்று முகமது கைப் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

பெங்களூர் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 18 ஓவர்களிலோ அல்லது 10 பந்துகளுக்கு மேல் மீதம் வைத்து வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் மட்டுமே பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். ஆனால் சென்னை அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே போதும்.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த போட்டியில் மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்கும். ஏனென்றால் கடந்த போட்டியில் பலமான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தனது சொந்த மண்ணில் வீழ்ந்து இருக்கிறது. மேலும் அதற்கு முன்னர் நடைபெற்ற போட்டிகளில் தோல்வி அடைந்ததால் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியது அந்த அணிக்கு உத்வேகத்தை கொடுக்கும்.

சிஎஸ்கேவின் முன்னணி பந்துவீச்சாளர்கள் விலகி உள்ள நிலையில், கையில் இருக்கும் பந்துவீச்சாளர்களை மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு அணியாக செயல்படுவது சிஎஸ்கேவின் பெரிய பலமாகும். மேலும் ஆர்சிபி அணியை பொறுத்தவரை இந்த சீசனில் ஆச்சரியமூட்டும் அணியாக இருந்திருக்கிறது. கடந்த ஏழு தோல்விகளுக்கு பிறகு மீண்டும் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றில் நீடிக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இரண்டு அணிகளும் சம பலம் வாய்ந்ததாக கருதப்படுவதால், எந்த அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்ப்பு நிலவிவரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கைப் சிஎஸ்கே வெற்றி பெறும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறும் பொழுது
“சிஎஸ்கே பெரிய போட்டிகளில் எப்படி விளையாட வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். கடந்த சீசனின் இறுதிப் போட்டியில் இரண்டு பந்துகளுக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜடேஜா அபாரமாக விளையாடினார்.

இதையும் படிங்க:மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் வெற்றி வாய்ப்பு யாருக்கு.? மழையை நம்பிதான் சிஎஸ்கே உள்ளதா.? முழு விபரம்

மேலும் இந்த முறை தோனி மிகப்பெரிய ஃபார்மில் இருக்கிறார். மேலும் இறுதியில் சிறப்பாக கட்டத்தில் விளையாடக் கூடிய வீரர்களும் சென்னை அணியில் உள்ளனர். முக்கியமான கட்டத்தில் தோனியின் பார்முலா என்னவென்றால் எதற்கும் பதட்டம் அடைய வேண்டாம், மூச்சு விடுங்கள் என்பது மட்டுமே. அவரிடம் இருக்கும் ஸ்பெஷல் கலை இது. ஐபிஎல்லில் பல கேப்டன்கள் வந்தாலும் போனாலும் தோனி எப்போதுமே தனிச்சிறப்பு மிக்கவர். அதனால்தான் அவர் சாம்பியன் வீரராக இருக்கிறார். சிஎஸ்கே அணி ஆர்சிபிஐ வெற்றி பெறும்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles