காயத்துடன் போராடும் தோனி.. இன்றைய போட்டியில் களமிறங்குவாரா? மவுனம் கலைக்கும் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்

நடப்புச் சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று 5 போட்டிகளில் தோல்வி அடைந்து தற்போது புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

பிளே ஆப் சுற்றுக்கு சென்னை அணி தகுதி பெற வேண்டுமானால் இனி வருகிற மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகள் கட்டாயமாக வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த போட்டியில் காயத்துடன் விளையாடிய மகேந்திர சிந் தோனி இன்றைய போட்டியில் களமிறங்குவாரா? என்பது குறித்த சந்தேகங்கள் நிலவி வருகிறது.

- Advertisement -

மகேந்திர சிங் தோனி கடந்த ஆண்டு கால் முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டு அந்த ஆண்டு முழுவதும் ஐபிஎல் தொடரில் விளையாடினார். ஐபிஎல் தொடர் முடிந்த பின்னர் அறுவை சிகிச்சை செய்து கொண்டு கிட்டத்தட்ட 12 மாதங்கள் ஓய்வெடுத்து வந்த நிலையில், கடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் இறுதிக்கட்டத்தில் தோனி களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சர்துல் தாக்கூர் களம் இறங்கி விளையாடினார்.

- Advertisement -

பின்னர் தோனிக்கு தசைநார் கிழிந்து இருப்பதாகவும், அதனால்தான் அவர் முன்னரே களமிறங்கவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும் அவரது காயத்தின் தீவிரம் குறித்து உறுதியாக எந்த தகவலும் வெளிவரவில்லை.

இந்த சூழ்நிலையில் சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் மகேந்திர சிங் தோனி காயத்தின் தீவிரம் குறித்தும் அவர் இன்றைய போட்டியில் களமிறங்குவாரா? என்பது குறித்தும் விளக்கம் அளித்திருக்கிறார் இது குறித்து அவர் கூறும் பொழுது
“நாங்கள் தோனியின் பணி சுமையை மிக தீவிரமாக கண்காணித்து வருகிறோம். மகேந்திர சிங் தோனி தற்போது காயத்துடன் நீண்ட நேரம் பேட்டிங் செய்தால் அவரை நாங்கள் இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

- Advertisement -

அவர் கடைசியில் களமிறங்கி பௌண்டரி மற்றும் சிக்ஸர்கள் அடித்து தாக்கத்தை ஏற்படுத்த கூடும் என்பதால் அவரை வைத்து புதிய முயற்சிகள் செய்து வருகிறோம். கடந்த ஆண்டு அவர் முழங்கால் அறுவை சிகிச்சை செய்து பலவீனமாக இருந்தபோதே அவரால் சமாளிக்க கூடிய அளவுதான் பணிச்சுமை இருக்கும் என்றும் கூறியிருந்தோம். தோனி தவிர ஒரு பேக் அப் விக்கெட் கீப்பர் தேவைப்படுகிறார். தோனி இரண்டு அல்லது மூன்று ஓவர்கள் பேட்டிங் செய்து சூழ்நிலையை மாற்றக் கூடியதுடன் அவர் கேப்டனிடம் களத்தில் தனது அனுபவங்களை உரையாடுவதற்கும் மிக முக்கியமாக தேவைப்படுகிறார்.

இதையும் படிங்க:தோனிக்கு எதிராக திட்டம்.. பக்கா ஸ்கெட்ச் போடும் கில், நெக்ரா.. வெற்றி வேட்டையை தொடருமா சென்னை அணி?

மேலும் இந்த காயம் என்பது அவருக்கு புதிது கிடையாது. ஆனால் இது தற்போது செய்தியாகி விட்ட நிலையில் அவரால் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய முடியாது. எனவே இவற்றை யோசித்து நாங்கள் தோனிக்கு ஒரு புதிய ரோலை முயற்சி செய்து வருகிறோம். என்று கூறுகிறார். இதன் மூலம் தோனிக்கு காயத்தின் தீவிரம் பெரிதாக இல்லை என்றும் அவர் அடுத்த போட்டியில் களமிறங்குவார் என்பதும் தெளிவாகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles