தோனிக்கு எதிராக திட்டம்.. பக்கா ஸ்கெட்ச் போடும் கில், நெக்ரா.. வெற்றி வேட்டையை தொடருமா சென்னை அணி?

இன்று ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் அகமதாபாத் மைதானத்தில் மோத இருக்கிறது. இதில் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடி வரும் மகேந்திர சிங் தோனிக்கு குஜராத் அணியின் கேப்டன் கில் மற்றும் பயிற்சியாளர் நெக்ரா ஆகியோர் திட்டம் வகுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் பங்கு பெற்று நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஏழு போட்டிகளில் தோல்வி அடைந்திருக்கிறது. குஜராத் அணி பிளே ஆப் சுற்றுக்கு நீடிக்க வேண்டுமானால், இனி வரும் மூன்று போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். இந்த சூழ்நிலையில் குஜராத் அணி இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சந்திக்க உள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் குஜராத் அணியின் கேப்டன் கில் மற்றும் பயிற்சியாளர் நெக்ரா ஆகியோர் சென்னை அணிக்கு எதிராக தீவிரமாகத் திட்டம் தீட்டி வருகிறார்கள். மேலும் அவர்கள் மகேந்திர சிங் தோனியை கட்டுப்படுத்துவதும் முக்கிய திட்டமாக இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சீசன்களை காட்டிலும் இந்த ஆண்டு மகேந்திர சிங் தோனி மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார் என்று தான்கூற வேண்டும்.

- Advertisement -

கடைசி கட்டத்தில் களமிறங்கி அதிரடியாக சிஎஸ்கேவின் ரன்களை உயர்த்தி வந்தார். இந்த சூழ்நிலையில் அவரை முதன்முறையாக பஞ்சாப் கிங்ஸ் அணி அவரை கட்டுப்படுத்தியது. கடந்த ஆறு போட்டிகளாக வேகப்பந்து வீச்சை சாமர்த்தியமாக எதிர்கொண்டு ரன்களை குவித்து வந்த தோனி பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண் தோனி இறுதி கட்டத்தில் வருவதை முன்னரே கணித்து 19 ஆவது ஓவர் ராகுல் சகாரை வீச வைத்தார்.

இதனால் கடந்த 7 இன்னிங்ஸ்களில் முதல்முறையாக மகேந்திர சிங் தோனி ஆட்டம் இழந்தார். தோனி நீண்டகாலமாக கிரிக்கெட் விளையாடதாலும், பெரும்பாலும் வேகப்பந்துவீச்சை வைத்து பயிற்சியை மேற்கொண்டதாலும் அவருக்கு சுழற் பந்துவீச்சை எதிர்கொள்வது சற்று சிக்கல் இருந்து வந்தது. அதிலும் லெக் ஸ்பின்னரை எதிர்கொள்வதில் தோனி மிகவும் சிரமப்பட்டார்.

- Advertisement -

இதனை அறிந்து கொண்ட பஞ்சாப் அணி தெளிவாக இறுதி ஓவரில் ராகுல் சகாரை வீச வைத்தது. எனவே அந்த பாணியை தற்போது குஜராத் அணியும் கடைபிடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குஜராத் அணியில் தரமான சுழற் பந்துவீச்சாளர்கள் இருப்பதால் மகேந்திர சிங் தோனி களம் இறங்கும் அந்த சமயத்தில் சுழற் பந்து வீச்சை வைத்து பந்து வீச திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க:இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?. ஜூன் மாதத்தோடு முடியும் டிராவிட்டின் பதவிக்காலம்.. வெளிநாட்டு வீரர்களுக்கும் வாய்ப்பு.. விளக்கம் கூறும் ஜெய்ஷா

இருப்பினும் கடந்த இரண்டு போட்டிகளாக இதை தோனியும் கணித்து இருப்பார். இதனால் இன்றைய குஜராத் அணிக்கு எதிரான போட்டியிலும் தோனி தகுந்த திட்டத்தோடு வரலாம். சென்னை அணிக்கு இன்னும் மூன்று போட்டிகள் மீதம் இருப்பதால் மூன்றில் இரண்டில் வெற்றி பெற்றாலே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும். இதனால் இந்த ஆட்டத்தில் ரசிகர்களுக்கு அனல் பறக்கும் போட்டியாக அமையும் என்பது சந்தேகம் இல்லை.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles