இம்பேக்ட் பிளேயர் விதியை சரியாக பயன்படுத்தினோம்.. இவர் வலை பயிற்சியில் 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசுகிறார்.. வெற்றிக்கு பின்னர் பேசிய கேப்டன் ருத்ராஜ்

நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. வெற்றிக்கான காரணம் குறித்து சில முக்கிய கருத்துக்களை சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

பஞ்சாப் அணியின் சொந்த மைதானமான தரம்சாலாவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது. கேப்டன் ருத்ராஜ் 32 ரன்களும், டாரி மிச்சல் 30 ரன்கள், ஜடேஜா 26 பந்துகளில் 43 ரன்களும் குவித்தனர். பந்துவீச்சில் ஹர்சல்பட்டேல் மற்றும் ராகுல் சாஹர் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளும், அர்ஸ்தீப் சிங் இரண்டு விக்கெட்களும், ஷாம் கரண் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி பஞ்சாப் அணி களம் இறங்கியது. கடந்த போட்டிகளில் பந்துவீச்சு பலவீனமாக இருந்த சிஎஸ்கேவுக்கு இந்த முறை பந்துவீச்சாளர்கள் தங்களது சிறந்த பங்களிப்பை வழங்கினார்கள். சுழற் பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என இரண்டிலும் கலக்கிய சென்னை அணியினர் பஞ்சாப் அணியை 139 ரன்கள் மட்டுமே குவிக்க விட்டனர்.

- Advertisement -

இதனால் 28 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தகுதி பெற்று தங்களது ஆறாவது வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் பிளே ஆப் சுற்றுக்குச் செல்ல சிஎஸ்கேவிற்கு பிரகாசமான வாய்ப்பு உருவாகி இருக்கிறது. இதே நேரத்தில் ஏழாவது தோல்வியை பெற்ற பஞ்சாப் அணி புள்ளி பட்டியலில் தற்போது எட்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அனியின் கேப்டன் ருத்ராஜ் கூறும் பொழுது
“நீங்கள் போட்டியில் டாஸ் இழந்து போட்டியை வென்று விட்டால் டாஸ் இழந்தது நல்லது என்று கூறுகிறார்கள். ஆனால் எனக்கு டாஸ் என்பது எப்போதுமே முக்கியமான ஒன்று. முதலில் ஆடுகளம் பேட்டிங் செய்யும்போது மெதுவாக இருந்தது. குறிப்பிடத்தக்க பவுன்ஸ் இருந்தது. முதலில் நாங்கள் பேட்டிங் செய்த விதத்தை பார்த்து 200 ரன்கள் குவிக்கலாம் என்று நம்பிக்கை இருந்தது.

- Advertisement -

ஆனால் விக்கெட்டுகள் விழுந்ததால் 160 முதல் 170 ரன்கள் மட்டுமே குவித்தோம். ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் நாங்கள் பந்துவீசிய விதத்தில் போட்டி சமநிலைக்கு வந்தது. சிமர்ஜித் சிங் இந்த போட்டியில் அற்புதமாக பந்து வீசினார். அவர் வேகமாக பந்து வீச என்ன செய்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் வலை பயிற்சியின் போது 150 கிலோ மீட்டருக்கு குறைவில்லாமல் வீசுகிறார். எங்கள் அணியில் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர். ஆனால் ஒரே நேரத்தில் எல்லாருக்கும் வாய்ப்பு கொடுக்க முடியவில்லை இன்று அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இதையும் படிங்க:10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்து விட்டதாக நினைத்தேன்.. இவரின் 2 விக்கெட் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.. ஆட்டநாயகன் ஜடேஜா பேட்டி

நாங்கள் ஒரு இம்பேக்ட் பிளேயரை கூடுதல் பேட்ஸ்மேனாக அனுப்பலாம் என்று நினைத்தோம். ஆனால் பேட்ஸ்மேன் 10 முதல் 15 ரன்கள் மட்டுமே குவிப்பார். ஒரு பந்துவீச்சாளரை களம் இறக்கினால் இரண்டு முதல் மூன்று விக்கெட்டுகளை அவரால் எடுக்க முடியும். சில தோல்விகளுக்கு பிறகு கிடைத்த இந்த வெற்றி மகிழ்ச்சியாக உள்ளது. இனி வரும் போட்டிகளிலும் வெற்றி பெற முயற்சிப்போம்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles